புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பதுங்கி இருந்து பாய காத்திருக்கும் போட்டியாளர்.. பிக்பாஸ் பைனலுக்கு செல்ல தகுதியான 3 பேர்

Biggboss 7: விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டதிலிருந்து மற்ற சேனல்களின் டிஆர்பி வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் இதனால் வரவேற்பு பெற்ற சீரியல்கள் கூட தத்தளித்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் போட்டியாளர்கள் விளையாட்டு தந்திரங்களை தெரிந்து கொண்டு விளையாடுவதும் அட்ரா சக்க என ரசிகர்களை சொல்ல வைத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விசித்ரா மற்றும் கூல் சுரேஷ் இருவரும் இந்த நிகழ்ச்சியில் யார் நன்றாக கேம் விளையாடுகிறார்கள் என்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் கூல் சுரேஷ் நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி கண்ணனை டேஞ்சரான ஆளு என்று சொல்கிறார். இந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்த விசித்ரா அவரை மேலும் சொல்ல தூண்டுகிறார். அதை தொடர்ந்து கலாய்ச்சு கிண்டல் பண்ணி பேசி சிரிப்பவர்களை விட சைலன்டாக இருப்பவர்களை நம்பவே முடியாது.

அவர்கள் தான் சைலன்ட் கில்லர்ஸ் என்று கூல் சுரேஷ் ஒரு உள் அர்த்தத்தோடு கூறுகிறார். அதை தொடர்ந்து விசித்ரா, யுகேந்திரனுக்கு விளையாட்டின் அத்தனை அம்சங்களும் தெரிகிறது. அதற்கு அடுத்ததாக பிரதீப், ஜோவிகா ஆகியோர் கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ஆரூடம் சொல்கிறார்.

உண்மையில் இவர்களின் விளையாட்டு புது மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும் யுகேந்திரன் ஒவ்வொன்றையும் கவனமாக செய்து வருகிறார். அதேபோல் பிரதீப் சில சமயம் கோமாளித்தனமாக எதையாவது செய்தாலும் ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த வரிசையில் ஜோவிகாவுக்கு பல எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தாலும் அம்மா வனிதாவின் வழிகாட்டுதல் அவருக்கு இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்த வகையில் இவர்கள் மூன்று பேரும் இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதியானவர்கள் தான். ஆனால் இதில் டைட்டிலை அடிக்கும் வாய்ப்பு யுகேந்திரனுக்கு அதிகமாகவே இருக்கிறது.

Trending News