வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டிஆர்பிக்காக பலியாடான போட்டியாளர்.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ் எலிமினேஷன்

Biggboss 7: நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியை எதிர்பார்க்கும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு கமல் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த வாரம் நடந்த எலிமினேஷன் நிச்சயம் எதிர்பாராதது.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ஓவர் ஆட்டம் போட்டு வந்த ஐஷு தான் வெளியேறுவார் என நேற்று வரை ரசிகர்கள் நம்பி வந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. அதாவது வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்த அன்னபாரதி தான் இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறுகிறார்.

இதற்கு முக்கிய காரணம் டிஆர்பி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு கன்டென்ட் கொடுத்து வந்தனர். ஆனால் இருந்த இடம் தெரியாமல் இருந்த அன்ன பாரதியால் பிரயோஜனம் இல்லை என்று தான் விஜய் டிவி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

Also read: பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் இவர்தான்.. தலைகீழாக மாறப் போகும் ஸ்மால் பாஸ் வீடு

அது மட்டுமின்றி ஐஷுவை வெளியேற்றினால் நிச்சயம் பரபரப்பு குறைந்து விடும். லவ் கன்டென்ட் கிடைக்காமல் போய்விடும். ஏனென்றால் இந்த வாரம் பிக்பாஸ் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இவர் நிக்சன் உடன் சேர்ந்து பல அலப்பறைகளை செய்தார். அதிலும் ஸ்மோக்கிங் ரூமில் நடந்த கூத்து அனைவரும் அறிந்தது தான்.

இப்படி லட்டு மாதிரி விஷயங்கள் இருக்கும் போது ஐஷு எப்படி வெளியேறுவார். அதனாலேயே அன்னபாரதி இப்போது பலியாடாக மாறி இருக்கிறார். அதுவும் வந்த முதல் வாரத்திலேயே அவர் எவிக்ட் செய்யப்படுவது பரிதாபமாக தான் இருக்கிறது. இதைத்தான் பிக்பாஸ் ரசிகர்கள் ஆதங்கத்தோடு குறிப்பிட்டு வருகின்றனர்.

ஏனென்றால் வந்த உடனேயே அவர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு மாற்றப்பட்டு சேவகம் செய்து வந்தார். இந்த வாரமாவது பிக்பாஸ் வீட்டை முழுதாக சுற்றிப் பார்க்கலாம் என்று இருந்த அவருக்கு இப்படி ஒரு ஷாக் கிடைத்திருக்கிறது. இப்படி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் இன்று ஆண்டவரின் தரமான சம்பவமும் காத்திருக்கிறது.

Also read: கமல் வீட்டை விட்டு துரத்த போவது யாரை.? எலிமினேஷனால் தலைகீழாக மாறப் போகும் பிக்பாஸ்

Trending News