சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

அர்த்த ராத்திரியில் நடக்கப்போகும் பிக்பாஸ் எவிக்ஷன்.. வெளியேற போகும் அந்த போட்டியாளர்

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதுதான் கடைசி வாரம் என்பதால் போட்டியாளர்கள் தங்களுக்குள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர். அதனால் இன்னும் சில நாட்களில் வெற்றியாளர் யார் என்பது நமக்கு தெரிந்துவிடும்.

இந்நிலையில் இன்று மேலும் ஒரு எவிக்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடத்தப்பட உள்ளது. இப்போது பிக்பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ், தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், அபிராமி, ஜூலி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.

இதில் வழக்கம்போல பாலாஜி அதிக ஓட்டுகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக தாமரை, நிரூப், ஜூலி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதனால் ரம்யா பாண்டியன் மற்றும் அபிராமி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருக்கிறது.

இந்த இருவரில் அபிராமிக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனென்றால் சமீபகாலமாக அவரின் நடவடிக்கைகள் யாருக்கும் பிடிக்கவில்லை. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அபிராமி தற்போது ரசிகர்களை எரிச்சல் படுத்தும் விதமாக பேசி வருகிறார்.

மேலும் கடந்த சில வாரங்களாகவே இவர் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்டவசமாக இவர் தப்பித்து வந்தார். ஆதலால் இந்த முறை அவர் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.

அதேபோல் பிக் பாஸ் வீட்டில் விஷ பாட்டிலாக சுற்றி வரும் ரம்யா பாண்டியனும் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி வருகிறார். அதுவும் பாலாவை அவர் டார்கெட் செய்து பேசி வருவது பாலாவின் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் விஜய் டிவி அவரை கட்டாயம் காப்பாற்றி விடும்.

எது எப்படி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பாலாதான் வெற்றியாளராக மகுடம் சூட்டபடுவார் என்று அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் சில நாட்களில் வெற்றியாளர் யார் என்பது நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

Trending News