வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எவ்வளவு டென்ஷன் ஆனாலும் நடிகை மீது கை வைக்காத ஒரே இயக்குனர்.. சீக்ரெட்டை புட்டு புட்டு வைத்த சந்தானம்

Actor Santhanam: தமிழ் சினிமாவில் காமெடியனாக ரவுண்டு கட்டிய சந்தானம் சமீப காலமாகவே ஹீரோவாக தொடர்ந்து படங்களில்  நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் வரும் ஜூலை 28-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்.

 இந்த படத்திற்கான பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது கலந்து கொண்டு பேசிய சந்தானம், இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் பார்த்திராத விஷயத்தை அந்த ஒரு இயக்குனரின் படப்பிடிப்பு தளத்தில் பார்த்திருக்கிறேன்.

Also Read: சந்தானத்துக்கு போட்டியாக சதீஷ் செய்யும் மேஜிக்.. வைரலாகும் வித்தைக்காரன் டீசர்

அவர் எவ்வளவு டென்ஷன் ஆனாலும் நடிகையின் மீது கை வைக்க மாட்டார் என பிரபல இயக்குனரை பற்றிய சீக்ரெட்டை போட்டுடைத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படம் தான் வீராசாமி.

இந்த படத்தில் டி ஆருக்கு நண்பராக சந்தானம் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது படத்தில் நடித்த ஹீரோ ஹீரோயின்களான மும்பையைச் சேர்ந்த அருணாக அஜீஸ் மற்றும் ஷீலா கவுர்  இருவருக்கும் இடையே ஒரு நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் காட்சியை  டிஆர் இயக்கிக் கொண்டிருந்தார்.

Also Read: மாதவன் சினிமாவை வெறுக்க காரணமாய் அமைந்த 5 படங்கள்.. நடிப்பே வேண்டாம் என துபாய் பறந்த மேடி

அப்போது அந்தக்காட்சியை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் இருவரும் சொதப்பி கொண்டிருந்தனர். உடனே டிஆர் நீச்சல் குளத்தில் இறங்கி நடிகரை கன்னத்தில் அறைந்து சொல்லிக் கொடுத்தார். ஆனால் அந்த டென்ஷனிலும் கூட  நடிகையை எதுவும் சொல்லாமல் சந்தானத்தை அழைத்து அவருடன் டிஆர் ரொமான்ஸ் செய்து, இப்படி தான் செய்ய வேண்டும் என கற்றுக் கொடுத்தார்.

அவ்வளவு கண்ணியமான இயக்குனரை இன்று வரை நான் பார்க்கவில்லை. மறுபடியும் நீச்சல் குளத்திலே குதித்து மறுபுறம் வந்து அந்தக் காட்சியை படமாக்கினார். இவ்வாறு பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை சந்தானம் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இயக்குனர் டிராஜேந்தரை பெருமையாக பேசினார். 

Also Read: ட்ரெய்லர் ஓட மாயமாக மறைந்து போன 5 படங்கள்.. சந்தானத்திற்கு கை கொடுக்காத சர்வர் சுந்தரம்

Trending News