புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூப்பர் ஸ்டாரால தான் அந்த படம் பிளாப் ஆச்சி.. ஷாக்கான பதிலடி கொடுத்த இயக்குனர்

சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்காதா என பல இயக்குனர்கள் தவம் கிடக்கிறார்கள். ஏனென்றால் ரஜினிக்கு என்று தமிழ் சினிமாவில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் ரஜினியால் தான் அந்த படம் பிளாப் ஆனது என்று ஒரு இயக்குனர் பேட்டியளித்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது பல ஹீரோக்களுக்கு தரமான ஹிட் படங்களை கொடுத்து தனது கேரியரில் தூக்கி விட்ட இயக்குனர் இப்படி சொல்வது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

Also Read: தேரை இழுத்து தெருவுல விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற சோகம்

அதாவது விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு ஹிட் படத்தை கொடுத்தவர் ஏ ஆர் முருகதாஸ். ரஜினியை வைத்து தர்பார் என்ற படம் இயக்கி இருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸிடம் தர்பார் படத்தின் தோல்விக்கான காரணம் கேட்கப்பட்டது.

அப்போது அந்த படத்தின் தோல்விக்கு காரணம் சூப்பர் ஸ்டார் தான் என்று கூறியிருந்தார். அதாவது பிப்ரவரி மாதம் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது. மேலும் ஜூன் மாதத்திற்கு பிறகு ரஜினி அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்திருந்தார். ஆகையால் ரஜினியின் கடைசி படமாக தர்பார் படம் இருக்கும் என்று கூறப்பட்டது.

Also Read: சூப்பர் ஸ்டார் உடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. செட் ஆகாமல் கடைசியில் ரஜினி எடுத்த முடிவு

பிப்ரவரியில் அறிவிப்பு வெளியான நிலையில் மார்ச் மாதமே படப்பிடிப்பு தொடங்க வேண்டி இருந்தது. ஆகையால் சூப்பர் ஸ்டாரின் படத்தை எப்படியும் நழுவ விட்டு விடக்கூடாது என நான் விரைந்து எழுதிய திரைக்கதை மற்றும் கதையில் முழு நம்பிக்கை வைத்து விட்டேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன்.

ஏனென்றால் வாழ்நாளில் ரஜினியின் ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இது மட்டுமின்றி அவருடைய தீவிர ரசிகனும் கூட, இந்தப் படத்தை தவறவிட்ட கூடாது என்ற எண்ணத்தால் சொதப்பிவிட்டதாக முருகதாஸ் ஒத்துக் கொண்டுள்ளார். மேலும் தர்பார் படம் தனக்கு நல்ல பாடம் கற்பித்ததாகவும் கூறியிருந்தார்.

Also Read:100 கோடி எல்லாம் தலைவருக்கு அப்பமே அசால்ட்.. 15 வருடத்துக்கு முன்னே ரஜினிக்கு கூரையை பிச்சு கொட்டிய 6 படங்கள்

Trending News