புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கேப்டன் விஜயகாந்தின் ஜெராக்ஸ்.. கலாபவன் மணி முதல் ஜெயிலர் விநாயகம் வரை தோள் கொடுத்த ஹீரோ

Actor Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டு சென்றாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இப்போதும் கூட கண்ணீருடன் அவரின் சமாதிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவுக்கு அவருடைய மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதற்கு முக்கிய காரணம் அவர் ஏழை மக்களுக்கு செய்த அன்னதானம் தான்.

இவரைப் போலவே மலையாள உலகில் ஒரு ஹீரோவும் இருக்கிறார். சுருக்கமாக இவரை கேப்டன் விஜயகாந்தின் ஜெராக்ஸ் என்று கூட சொல்லலாம்.

மலையாள உலகின் கேப்டன்

அவர் வேறு யாரும் அல்ல சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பரான மம்முட்டி தான். இவர் வளர்ந்து வரும் பல ஹீரோக்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

அந்த வகையில் கலாபவன் மணி முதல் ஜெயிலர் பட விநாயகம் வரை பலரை கை தூக்கி விட்ட பெருமையும் இவருக்கு உண்டு. அதே போல் சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவருக்கும் இவர் வீட்டிலிருந்து தான் உணவு போகுமாம்.

தான் ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தா இல்லாமல் அனைவருக்கும் விருந்து வைத்து அசைத்து விடுவாராம். மேலும் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் போன்ற நாட்களிலும் மம்முட்டியின் வீட்டில் தடபுடலாக விருந்து நடக்கும்.

இப்போதும் கூட அவர் பலருக்கும் வயிறார உணவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அதனாலேயே இவரை கேப்டன் விஜயகாந்தின் மறு உருவம் என புகழ்ந்து வருகின்றனர்.

 

Trending News