வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாரதிராஜா அறிமுகத்தில் காணாமல் போன ஒரே நடிகை.. நாலே படத்தில் நடந்த பரிதாபம்

கிராமத்துக் கதைகளுக்கு பெயர் போன இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் கார்த்திக், ராதா, ராதிகா, சுதாகர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு பல திறமையான நட்சத்திரங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு.

இவர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் அனைவரும் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து உள்ளார்கள். அதிலும் 80 காலகட்டங்களில் இவர் அறிமுகப்படுத்திய நடிகைகள்தான் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்துள்ளார்கள். அந்த வகையில் அவர்கள் நாங்கள் பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு என்று அவருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆனால் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே ஒரு நடிகை மட்டும் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து விட்டு பிறகு காணாமல் போய்விட்டார். அதாவது பாரதிராஜா பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

அந்த படத்தில் நடித்தவர்தான் நடிகை ருக்மணி. நடனத்தில் கைத்தேர்ந்த நடிகையான இவரை பாரதிராஜா தன்னுடைய திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தத் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் ருக்மணி அதன்பிறகு ஆனந்ததாண்டவம், ரஜினியின் கோச்சடையான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் வராமல் போகவே நடனத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் தலைகாட்டினார்.

அதன் பிறகு சில சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த இவருக்கு தற்போது எங்கும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்கிவிட்டார். இதுவரை பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளில் இவர் ஒருவர் தான் திரையில் ஜொலிக்காமல் காணாமல் போன லிஸ்டில் சேர்ந்துள்ளார்.

Trending News