Jayam Ravi: இப்போது சோசியல் மீடியாவை திறந்தாலே ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரின் விவாகரத்து செய்தி தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து இப்போதும் விமர்சனம் ஆகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படி ஒரு செய்தி திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலையை கிளப்பி இருக்கிறது. இந்த விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிலும் ஜெயம் ரவிக்கு ஒரு நடிகை உடன் நட்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையில் அது வதந்தி தான் ஜெயம் ரவி தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் மனிதர். அப்படிப்பட்டவர் ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவியை பிரிகிறார் என்றால் நிச்சயம் வலுவான காரணம் இருக்கும்.
அந்த வகையில் இந்த ஜோடியின் பிரிவுக்கு காரணம் இதுதான் என்பதை வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதன்படி ஜெயம் ரவியின் மாமியார் அவரை கண்ட்ரோல் செய்து வந்திருக்கிறார்.
அவருடைய தயாரிப்பில் ஜெயம் ரவி சில படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் மருமகனாக இல்லாமல் மகன் போன்ற அன்புடன் தான் பழகி இருக்கிறார். ஆனால் மாமியார் தரப்போ இவரை தலையாட்டி பொம்மையாக வைக்க பார்த்திருக்கின்றனர்.
ஜெயம் ரவிக்கு ஆர்த்தி கொடுத்த டார்ச்சர்
அது மட்டும் இன்றி கால்ஷீட் விஷயங்களிலும் தலையீடு இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சொந்த அண்ணன் இயக்கத்தில் நடிப்பதற்கு கூட இவரால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை.
இது எல்லாவற்றிற்கும் மேலாக சந்தேகம் தான் இந்த விரிசலுக்கு காரணமாக இருக்கிறது. ஆர்த்தி ஜெயம் ரவியை சந்தேகப்பட்டு பல டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். படப்பிடிப்பில் இருக்கும் போது அடிக்கடி போன் செய்து என்ன செய்றீங்க? பக்கத்துல யார் இருக்கா? என கேட்பாராம்.
ஒருவேளை அவர் போனை எடுக்கவில்லை என்றால் டைரக்டர், அசிஸ்டன்ட் டைரக்டர், கேமரா மேன் என ஒவ்வொருவருக்கும் போன் செய்து விசாரிப்பாராம். அதேபோல் வெளியூர் சூட்டிங் சென்றால் பக்கத்து ரூமில் இருப்பவர்களை கூப்பிட்டு ஜெயம் ரவியின் அருகில் யார் இருக்கிறார்கள் என்று கேட்பாராம்.
இது ஒரு விதமான பொசசிவ் தான். எங்கே கணவர் தன்னை விட்டு சென்று விடுவாரோ என்ற அளவு கடந்த பயமும், காதலும் ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் அது எல்லை மீறிய நிலையில் ஜெயம் ரவி இதற்கு மேலும் முடியாது என தற்போது விவாகரத்து முடிவை எடுத்துள்ளார்.
ஆனால் இரு தரப்பிலும் இவர்களை சேர்த்து வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. அதனால் இவர்கள் சேரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதைவிட அதிகமாக பிரிவதற்கு தான் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஜெயம் ரவியின் விவாகரத்து பின்னணி
- இத்தனை வருஷம் இவங்க ஒண்ணா இருந்ததே பெரிய விஷயம்
- ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்திற்கு பின் இப்படி ஒரு காரணமா.?
- சும்மா இருந்த மீடியாவை சொறிஞ்சு விட்ட ஜெயம் ரவியின் மனைவி