சூர்யாவின் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு சூரரை போற்று என்ற திரைப்படம் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளையும் பெற்றது. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க, சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.
தற்போது இந்த திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைக்கதை, சிறந்த படம் ஆகியவற்றின் கீழ் இப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா உட்பட படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்த தேசிய விருது குறித்து சில சர்ச்சையான விஷயங்கள் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது தேசிய விருது தேர்வு குழுவில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை என்பவர் இடம் பெற்றுள்ளார். அதன் காரணமாக தான் சூர்யாவின் திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
சூரரைப் போற்று சிறந்த திரைப்படம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இப்படி ஐந்து விருதுகளை பெற்றிருப்பதற்குப் பின்னால் தங்கதுரை தான் இருக்கிறார் என்று சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். அந்த வகையில் யூடியூபில் வலைப்பேச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிஸ்மி இதைப்பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதாவது அவர் தங்கதுரை அந்த குழுவில் இடம் பெற்றிருப்பதால் சூர்யாவுகோ அல்லது அவருடைய படத்திற்கோ தேசிய விருது கிடைத்தால் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போன்றே இப்போது விருதும் கிடைத்துள்ளது.
மேலும் இதற்குப் பின்னால் சில அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இந்த விருதுகளுக்கு பின்னால் பல சர்ச்சைகள் பேசப்பட்டு வந்தாலும், சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்திருப்பது உண்மையில் பொருத்தமானது தான் என்று திரையுலகில் கூறி வருகின்றனர். அவருக்கு எப்பவோ கிடைக்க வேண்டிய இந்த விருது கொஞ்சம் லேட் ஆனாலும் ஒரு வழியாக கிடைத்துவிட்டது என்று அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.