புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பீஸ்ட் இல்லை இது மான்ஸ்டர்.. பட்டையை கிளப்பும் வகையில் வெளிவந்த கே ஜி எஃப்-2 விமர்சனம்

நேற்று விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகியது. இன்று அதற்குப் போட்டியாக யாஷ் நடித்த கேஜிஎப் 2 படம் கிட்டத்தட்ட 250 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் ஆகியுள்ளது. ராக்கி பாய் எதிரிகளை துவம்சம் செய்து கேஜிஎப்-2வில் வெற்றி பெற்றாரா என்பதை இதில் பார்க்கலாம்.

முதல் பாகத்திலேயே கருடனை பந்தாடி கேஜிஎப் 2 க்கு நான்தான் கிங் என்று நிரூபித்தார் ராக்கி பாய். தனது ஆளுமையை அதிரடி ஸ்டன்ட்டுகள் மற்றும் ஆக்‌ஷனில் மிரட்டிய ராக்கி பாய் இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுக்கும் காட்சியிலேயே ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளுகிறார்.

வயலன்ஸ் எனக்கு பிடிக்காது ஆனால் வயலேன்ஸ் என்னை ரொம்ப பிடிக்கும் என்று ராக்கி பாய் சொல்லும்போதே திரையரங்குகளில் கைதட்டல்கள் அள்ளுகிறது. முதல் பாகத்தில் கருடனை படத்தில் பாதிக்கு மேல் தான் காட்டி இருப்பார்கள் ஆனால் இரண்டாம் பாகத்தில் ஆதிரா என்னும் கதாபாத்திரத்தில் ஆரம்பத்திலிருந்தே மிரட்டுகிறார் சஞ்சய் தத்.

இந்த பாகத்தில் கருடன் இறந்த செய்தி அறிந்ததுமே,ராக்கி பாயை துவம்சம் செய்து  மீண்டும் கேஜிஎஃப்பை அடைய வேண்டும் என்றும் அதீரா என்ட்ரி தரும் காட்சியிலேயே பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சஞ்சய் தத்

ஆளவந்தான் புகழ் ரவீனா டாண்டன், கேஜிஎப் 2வில் இந்தியாவின் தங்க சுரங்கத்தை ஒரு குறிப்பிட்ட கேங்ஸ்டர்கள் ஆட்சி செய்வதையும், அவர்கள் கையில் இருந்து அதை மீட்டெடுக்க வெறியுடன் இருக்கும் பிரதமர் ராமிகா சென்ன கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் என்று சொல்லலாம்.

ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களைக் கவருகிறார். இவருக்கு அந்த அளவுக்கு பெரிதாக படத்தில் சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் இல்லை.

படத்தில் ஆதிரா, ராக்கி பாயை சுட்டு வீழ்த்துவது போலவும், அவர் இறந்து விடுவது போலவும் காட்டுகிறார்கள். ஆனால் ராக்கி பாய் சாவில் இருந்து எப்படித் தப்பித்து மீண்டும் ஆதிராவை பழிவாங்குகிறார் என்பது தான் உச்சகட்டம்.

பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தை மனதில் வைத்துதான், முதல் பாகத்திற்கு அவ்வளவு மெனக்கெட்டு வேலை செய்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. சண்டைக் காட்சிகளை அவ்வளவு நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

பாகுபலி போல் கேஜிஎப் 2 சேப்டர் முடிகிறதா என்று பார்த்தால், அதுதான் இல்லை  கிளைமாக்ஸில் கொடுத்திருக்கிறார் எதிர்பாராத ட்விஸ்ட். படம் பார்த்த அனைவரையும் மூன்றாம் பாகத்தில் ராக்கி பாய் எப்படி தான் எதிரிகளை துவம்சம் செய்வார். அவருக்கு யாரெல்லாம் பகைவர்களாக வருவார்கள் என்பதை எதிர்பார்க்க வைக்கிறது. மொத்தத்தில் கேஜிஎப் 2 பார்க்க வேண்டிய ஒரு மிரட்டல் படம்.

Trending News