கடந்த சில நாட்களாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வாரிசு, துணிவு திரைப்படங்கள் கடந்த 11ஆம் தேதி ஆரவாரமாக வெளியானது. அதில் வாரிசை விட துணிவு திரைப்படத்திற்கு தான் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. இதனால் இந்த இரண்டு படங்களின் கலெக்சன் பற்றிய செய்தியும் மீடியாக்களில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த வகையில் தற்போது இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கலெக்சனில் மாஸ் காட்டி வருகின்றன. அதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் துணிவை பின்னுக்கு தள்ளி வாரிசு முன்னேறி இருக்கிறது. அதாவது வாரிசு முதல் காட்சிக்கு பிறகு பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது.
Also read: தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா அஜித் மற்றும் விஜய்.? இன்னும் தெளிவு பெறாத சினிமா மோகம்
ஆனால் அதெல்லாம் திட்டமிட்ட சதி என கூறும் வகையில் வாரிசு தற்போது வசூலில் நல்ல லாபம் பார்த்து வருகிறது. அந்த வகையில் இப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே 21 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. மேலும் உலகம் முழுவதிலும் 45 கோடி ரூபாய் வசூலித்து நல்ல லாபம் பார்த்தது. இது அப்படியே இரண்டாம் நாளும் தொடர்ந்து இருக்கிறது.
அதாவது வாரிசு படத்தின் இரண்டாம் நாள் வசூல் 35 கோடி ரூபாயாக இருக்கிறது. அப்படி பார்த்தால் இந்த இரண்டு நாட்களில் வாரிசு 80 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. அதேபோன்று துணிவு திரைப்படமும் முதல் நாளில் நல்ல ஓப்பனிங்கை பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளிலும் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த வகையில் துணிவு இரு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 40 கோடி ரூபாய் வசூலித்து முன்னிலையில் இருக்கிறது.
Also read: அஜித் சாரை பார்த்து கத்துக்கோங்க.. மனைவியிடம் திட்டு வாங்கிய வாரிசு நடிகர்
அதேபோல் வாரிசு தமிழ்நாட்டில் 35 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. ஆனால் உலக அளவில் துணிவை விட வாரிசு படத்திற்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி வாரிசு உலகம் முழுவதிலும் இந்த இரண்டு நாட்களில் 80 கோடியும், துணிவு 72 கோடியும் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் துணிவும் உலக அளவில் வாரிசும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் ஆட்டநாயகனாக விஜய் முன்னிலையில் இருக்கிறார். இந்த வசூல் இனிவரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பொங்கல் விடுமுறை வர இருப்பதும் இந்த படங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் இந்த பண்டிகை நாட்களில் இரு படங்களின் வசூல் எதிர்பார்த்ததற்கும் மேலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Also read: விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. அதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்