திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கருடனை ஏன் பார்க்கணும்.? 6 காரணங்கள்.. விடுதலையை மிஞ்சி நடித்து ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.?

Garudan: சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி மூவர் கூட்டணியில் கருடன் இன்று வெளியாகி உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் படத்தின் ட்ரெய்லரே வேற லெவல் மிரட்டலாக இருந்தது.

தற்போது படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதன்படி முதல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பு நிச்சயம் படம் ஹிட் என்பதையும் உறுதி செய்துள்ளது.

Sasikumar
Soori
Unni Mugundan
Durai Senthilkumar
Samuthrakani

அந்த வகையில் இப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 6 காரணங்களை இங்கு காண்போம். முதலாவதாக சூரியின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். விடுதலை படத்தில் நம்மை ஆச்சரியப்படுத்திய இவர் இதில் சொக்கனாக மிரட்டி விட்டார்.

பாராட்டு மழையில் கருடன்

காமெடியன் ஹீரோ அவதாரம் எடுத்தால் அதிலும் காமெடி தான் செய்ய வேண்டுமா என்ன? அப்படி இல்லை என தன்னுடைய வெறித்தனமான நடிப்பின் மூலம் இவர் நிரூபித்திருக்கிறார்.

தன்னுடைய விசுவாசத்தை காட்டும் இடத்திலும் ஏமாற்றம், துரோகம், குற்ற உணர்வு என படம் முழுக்க தன் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக சமுத்திரக்கனி, சசிகுமார், உன்னி முகுந்தன் கதாபாத்திரங்கள் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக கதையின் ஓட்டம் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துள்ளது. முதல் சில நிமிடங்கள் தொய்வாக இருந்தாலும் அதற்கு அடுத்து விறுவிறுப்பு தான்.

நான்காவது இடைவேளை காட்சி மற்றும் கிளைமேக்ஸ் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் தான். அதிலும் சிங்கிள் ஷாட் காட்சி மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் வரும் காட்சி புல்லரிக்கும் வகையில் இருக்கிறது.

ஐந்தாவதாக யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அதில் பஞ்சவர்ண கிளியே பாடல் கேட்பதற்கு இதமாக இருக்கிறது. ஆறாவது இயக்குனர் தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் அத்தனை பேரும் வெகு பொருத்தமாக இருக்கின்றனர்.

இப்படியாக நட்பு, பழிவாங்குதல், விசுவாசம், அன்பு, ஏமாற்றம் என அனைத்தும் கலந்த கலவையாக கருடன் இருக்கிறது. ஆக மொத்தம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள இப்படத்தை நிச்சயம் தியேட்டரில் பார்க்கலாம்.

ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த கருடன்

Trending News