Thangalaan: விக்ரம், பா. ரஞ்சித், ஜிவி பிரகாஷ் கூட்டினியின் தங்கலான் நேற்று ஆரவாரமாக வெளியானது. கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு, பெங்களூர் என பல இடங்களுக்கும் சென்று பிரமோஷன் செய்தது பட குழு. அதற்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.
பிரமோஷன் மட்டும் இதற்கு காரணம் கிடையாது. படத்தில் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. அதனாலயே இப்போது விக்ரம் ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த ஆடியன்ஸும் தங்கலானை சிலாகித்து பாராட்டி வருகின்றனர்.
படம் பார்த்தவர்கள் இப்படி கொண்டாடி வரும் நிலையில் படத்தை பார்க்காதவர்கள் அப்படி என்னதான் இருக்கு என யோசிக்கலாம். அந்த வகையில் எதற்காக தங்கலானை பார்க்க வேண்டும்? பா ரஞ்சித் என்ன சொல்லி இருக்கிறார்? என்பதை பின்வரும் 7 காரணங்கள் மூலம் இங்கு காண்போம்.
தங்கலானை ஏன் பார்க்க வேண்டும்.?
விக்ரம் தன் குடும்பம் மற்றும் மக்களோடு விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார். ஆனால் அந்த ஊர் மிராசுதார் அந்த நிலத்தை அபகரித்து அவர்களை அங்கே அடிமை வாழ்வு வாழச் செய்கிறார். அப்போது பிரிட்டிஷ்காரர் தங்கம் எடுக்க உதவி செய்ய வேண்டும் என அவர்களிடம் கேட்கிறார்.
இந்த அடிமை வாழ்க்கையில் இருந்து வெளிவர வேண்டும் என விக்ரம் தன் மக்களுடன் தங்க வேட்டைக்கு புறப்படுகிறார். அந்தப் பயணத்தில் அவர்கள் சந்தித்த துயரங்கள் என்ன? என்பதை தான் பா ரஞ்சித் தன்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பற்றியும் மறைக்கப்பட்ட வரலாறாகவும் இப்படம் வெளியாகி இருக்கிறது. இதற்கு விக்ரம் என்னும் மகா நடிகன் உயிர் கொடுத்துள்ளார். அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கு பின்னாலும் எவ்வளவு உழைப்பு கஷ்டம் இருக்கிறது என்பது படம் பார்க்கும் போதே உணர முடிகிறது.
அந்த அளவுக்கு மனுஷன் பின்னிட்டாருப்பா என சொல்ல வைத்துள்ளார். அடுத்ததாக ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு யானை பலத்தை கொடுத்திருக்கிறது. அடுத்து மாளவிகா மோகனின் நடிப்பு ரசிகர்களுக்கான மிகப்பெரிய சர்ப்ரைஸ்.
நடிக்கத் தெரியாத நடிகை என்ற பெயரை மாற்றி இனி வெயிட்டான கதாபாத்திரங்களில் அவரை காணலாம். மேலும் பார்வதியின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது. சிரிப்பு, கண்ணீர், கோபம் என நவரசங்களையும் காட்டி பின்னி பெடல் எடுத்துள்ளார்.
வழக்கமான பா ரஞ்சித் படமா.?
இவருக்கு அடுத்ததாக பசுபதியின் கதாபாத்திரம் ராமானுஜம் பணியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அவர் பேசும் விதம் நடிப்பு அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. அதேபோல் துணை நடிகர்களிடம் கூட நடிப்பில் குறை காண முடியவில்லை.
மேலும் கருஞ்சிறுத்தை, யானை, பாம்பு, மயில், தங்க சுரங்கம் என VFX நன்றாக இருக்கிறது. சில தொய்வு இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. அதேபோல் பா ரஞ்சித்தின் படங்கள் தன்னுடைய சமுதாயத்தில் நடந்து முடிந்த சம்பவங்களை பற்றியதாகத்தான் இருக்கும்.
இப்படமும் அதை தான் குறிக்கிறது என்றாலும் நேரடியாக சொல்லாமல் இலை மறை காயாக சொல்லி இருப்பது சிறப்பு. ஆக மொத்தம் சில தோல்விகளால் சரிந்திருந்த சீயான் தங்கலான் மூலம் மின்னி இருக்கிறார். அந்த வகையில் அவருடைய வெற்றிப் பாதை தொடங்கிவிட்டது என்பதுதான் படம் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது.
தோல்விகளைத் தாண்டி வெற்றியை நோக்கி செல்லும் விக்ரம்
- விக்ரம், பா ரஞ்சித் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தியதா.?
- சொல்லப்படாத தமிழர்களின் வலி, கதி கலங்க வைத்த விக்ரம்
- விக்ரமின் 2 வருட உழைப்பு வொர்க் அவுட் ஆனதா.?