வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சூப்பர் ஸ்டாரே வந்தாலும் இதுதான் பதில்.. ஒரு ஹிட்டு கொடுத்துட்டு தலைகனத்தில் ஆடும் பிரதீப்

Pradeep Ranganadhan: சினிமாவில் எப்படியாவது வெற்றி அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குனராக உள்ளே நுழைந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் எடுத்த கோமாளி படத்தின் மூலம் கதை நன்றாக இருக்கிறது என்று பாராட்டுக்கள் குவிந்தது. அதனை அடுத்து லவ் டுடே படத்தை இயக்கி அதிலே ஹீரோவாகவும் நடித்தார். அப்படி நடித்த பொழுது எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் அளவிலும் ஹீரோவுக்கான லுக்கும் இவரிடம் இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் இவரை தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால் தற்போது இயக்குனர் பாதையை விட்டு வெளியே வந்து விட்டார். இவருடைய முழு கவனமும் ஹீரோவாக படங்களில் நடிப்பதில் மட்டுமே இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி சில இயக்குனர்களும் இவரை தேடி வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் முதலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகிவிட்டார்.

இவர்கள் காம்போவில் LIC படம் உருவாகப் போகிறது. அடுத்ததாக ஓ மை கடவுள் படத்தை எடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடிக்கப் போகிறார். அதன் பின் மறுபடியும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் ஒரு படத்தில் இணையப் போகிறார். அடுத்ததாக இவரை ஒரு படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார்.

Also read: பிரதீப் ரங்கநாதன் மாதிரி வராதுங்க .. லவ் டுடே ஹிந்தியில் ஹீரோ ஹீரோயின் ரெடி

கிட்டத்தட்ட லவ் டுடே படத்தைப் போல. இப்படத்தை தயாரிப்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் ஓகே சொல்லி இருக்கிறது. இப்படி ஹீரோவாக ஜொலிப்பதற்கு படத்தில் நடிப்பதை மட்டுமே கவனம் செலுத்துவதால் இனி மற்ற நடிகர்களுக்கு இயக்குனராக மாற மாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அது விஜய் படமாக இருந்தாலும் சரி, சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் சரி என்னுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும் என்று தெனாவட்டாக சொல்லும் அளவிற்கு உச்சகட்ட தலைகனத்தில் ஆடி வருகிறார். இவரை பொறுத்தவரை எப்படியாவது விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகத்தான் கூறியிருந்தார்.

இது சம்பந்தமாக விஜய் இடமும் கதை சொல்லி கொஞ்சம் டைம் கேட்டிருந்தார். இதற்கு இடையில் பட வாய்ப்புகள் இவரை தேடி குவிந்து வருவதால் எல்லாத்தையும் மறந்து விட்டு ஹீரோவாக ஜொலிப்பதற்கு ஆசைப்பட்டு விட்டார். ஆனால் இதற்கெல்லாம் காரணம் இவர் நடித்த லவ் டுடே படம் ஹிட்டானது என்பதற்காக மட்டுமே உச்சாணிக்கொம்பில் இருந்து ஓவராக ஆடுகிறார்.

Also read: டாப் கீரில் செல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ஜெட் வேகத்தில் உயர்த்திய சம்பளம்

Trending News