செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லோகேஷுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இதுதான் வித்தியாசம்.. அஜித் டீலில் விட உண்மையான காரணம்

இப்போது அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனென்றால் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏகே 62 என்ற பெயரை நீக்கி உள்ளார். மேலும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஏகே 62 படத்தை மகிழ்திருமேனி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாகவும், அஜித்துக்கு எதிராகவும் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அஜித் எதற்காக விக்னேஷ் சிவனை நிராகரித்தார் என்று தற்போது வரை தெரியவில்லை. விக்னேஷ் சிவன் ஓவர் ஆட்டிட்யூட் காட்டக்கூடியவர் என பலரும் கூறியுள்ளனர்.

Also Read: எனக்கும் லோகேஷுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. துணிவு பேட்டியில் ஓப்பனாக போட்டுடைத்த ஹெச்.வினோத்

அதாவது ஒருமுறை டிவி நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சிலர் கலந்து கொண்டார்கள். அதில் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் போன்ற இளம் இயக்குனர்களும் பங்கு பெற்றனர். அப்போது எல்லா இயக்குனர்களிடமும் ஒரு படத்தின் வெற்றிக்கு எது தேவை என்ற பொதுவான கேள்வி வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த லோகேஷ் என்ன பொறுத்த வரையில் படத்தின் வெற்றிக்கு கதை மற்றும் திரைக்கதை தான் முக்கியம். இதுதான் ஒரு படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ளது என லோகேஷ் கூறியிருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய பதில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

Also Read: மகிழ் திருமேனி படத்தின் காப்பி தான் விக்ரம் படமா.? அட்லி போல காப்பி கதையில் சிக்கிய லோகேஷ்

அதாவது படத்திற்கு கதையைக் காட்டிலும் ஹீரோ தான் முக்கியம். பெரிய ஹீரோக்களின் படத்தை எடுத்தால் திரைக்கதை எல்லாம் தேவையே இல்லை. அவர்களது ரசிகர்களே படத்தை ஓட்டி வெற்றி அடையச் செய்து விடுவார்கள். அதுமட்டுமின்றி பெரிய ஹீரோக்கள் எப்படி நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று மோசமான பதிலை விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.

இந்த விஷயம் அஜித்துக்கு தெரிந்து தான் ஏகே 62 படத்திற்கு இவர் சரி வரமாட்டார் என்று யோசித்து படத்திலிருந்து தூக்கி உள்ளாரோ என பலரும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமின்றி திரைக்கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் கொண்டாடுவார்கள். அதற்கு சமீபத்தில் வெளியான லவ் டுடே படமே உதாரணம்.

Also Read: ஓவரா ஏங்க விட்ட அஜித்துக்கு கொடுத்த பதிலடி.. வாழ்க்கை ஒரு வட்டம் என நிரூபித்த விஷ்ணுவர்தன்

Trending News