வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்க்கும், அஜித்துக்கும் இதுதான் வித்தியாசம்.. துணிவை உதாசீனப்படுத்தும் வாரிசு படக்குழு

விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு இந்த இரு நடிகர்களும் போட்டி போட உள்ளனர். அதாவது அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் தற்போது படுஜோராக ப்ரோமோஷன் நடந்து வருகிறது. சமீபத்தில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதேபோல் துணிவு படத்தின் போஸ்டர்களும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

Also Read : இப்ப அஜித் இல்ல, ரஜினி ரசிகர்களை சீண்டி விட்ட தயாரிப்பாளர்.. வாரிசு மேடையில் வேண்டாத பேச்சு

துணிவு படத்தின் இயக்குனர் வினோத் பேசுகையில் வாரிசு படத்தை ரசிகர்களுடன் பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இது வினோத்தின் நற்பண்பை காட்டுகிறது.

வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் வாரிசு படம் தான் வெற்றி பெறும் என்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் விஜய் தான் உள்ளார் என்பதால் அதிக திரையரங்குகள் வாரிசு படத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Also Read : பாடல் வரி மூலம் பதிலடி கொடுக்கும் விஜய், அஜித்.. பற்றி எரியும் சோசியல் மீடியா

இப்படி விஜய்யின் சுற்று வட்டாரங்கள் அஜித்தை பற்றி ஏளனமாக பேசி வரும் நிலையில் அஜித் சுற்றுவட்டாரங்கள் வாரிசு படமும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் குணாதிசியம் தெரிவதாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

மேலும் இன்று அஜித்தின் துணிவு படத்தின் மூன்றாவது சிங்கள் என்று வெளியாக உள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் வாரிசு படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று உள்ளது.

Also Read : அந்த ஒரு விஷயத்தில் தான் ஜாதி கிடையாது.. வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

Trending News