விஜய்க்கும், அஜித்துக்கும் இதுதான் வித்தியாசம்.. துணிவை உதாசீனப்படுத்தும் வாரிசு படக்குழு

விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு இந்த இரு நடிகர்களும் போட்டி போட உள்ளனர். அதாவது அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் தற்போது படுஜோராக ப்ரோமோஷன் நடந்து வருகிறது. சமீபத்தில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதேபோல் துணிவு படத்தின் போஸ்டர்களும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

துணிவு படத்தின் இயக்குனர் வினோத் பேசுகையில் வாரிசு படத்தை ரசிகர்களுடன் பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இது வினோத்தின் நற்பண்பை காட்டுகிறது.

வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் வாரிசு படம் தான் வெற்றி பெறும் என்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் விஜய் தான் உள்ளார் என்பதால் அதிக திரையரங்குகள் வாரிசு படத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இப்படி விஜய்யின் சுற்று வட்டாரங்கள் அஜித்தை பற்றி ஏளனமாக பேசி வரும் நிலையில் அஜித் சுற்றுவட்டாரங்கள் வாரிசு படமும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் குணாதிசியம் தெரிவதாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

மேலும் இன்று அஜித்தின் துணிவு படத்தின் மூன்றாவது சிங்கள் என்று வெளியாக உள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் வாரிசு படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →