திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை.. இப்படியும் ஒரு காதலா என வியக்க வைத்த சம்பவம்

ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய எத்தனையோ நட்சத்திரங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படியும் கூட காதலிக்க முடியுமா என்று பலரையும் வியக்க வைத்த ஒரு ஜோடி என்றால் அது அஜித், ஷாலினி மட்டும் தான். 23 வருடங்களாக குறையாத காதலுடன் அவர்கள் வாழ்ந்து வருவதே இதற்கான சாட்சி.

அந்த வகையில் ஆரம்ப காலத்தில் அஜித் குறித்து ஏகப்பட்ட சர்ச்சையான செய்திகள் வெளிவந்ததுண்டு. ஷாலினியுடனான காதல் தான் அவரை முற்றிலுமாக மாற்றி விட்டது. இன்னும் சொல்லப்போனால் அவருடைய வாழ்க்கையை பக்குவப்படுத்தியதே இந்த காதல் தான். அதனாலேயே தன்னுடைய தேவதையை மிஸ் செய்து விடக் கூடாது என அஜித் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

Also read: அஜித்தின் வாழ்நாள் ஆசை நிறைவேறியது.. அதைப்போல் கனவை நிறைவேற்ற துடிதுடிக்கும் இளையராஜா

அதாவது இவர்களின் கல்யாண அறிவிப்பு வந்த சமயத்தில் ஷாலினி தமிழில் ரொம்பவும் பிசியான நடிகையாக இருந்தார். அதிலும் தமிழ் திரையுலகில் அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. இதனால் அவருடைய அப்பா இப்போதைக்கு திருமணம் வேண்டாம், நிறைய படங்களில் நடித்து செட்டிலான பிறகு கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தன் காதலியை உடனே மனைவியாக்கி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அஜித் அவர் அப்பாவே சம்மதம் கூறும் வகையில் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அதாவது ஷாலினி இன்னும் எத்தனை வருடங்கள் சினிமாவில் நடித்து சம்பாதித்தாரோ அவ்வளவு பணத்தையும் மொத்தமாக தன் மாமனாரிடம் அவர் கொடுத்திருக்கிறார்.

Also read: கண் சிமிட்டாமல் பெண்கள் சைட் அடிக்கும் 5 நடிகர்கள்.. மாப்பிள்ளை நா அது அரவிந்த்சாமி மாதிரி தான்

சுருக்கமாக சொல்லப்போனால் தன் வருங்கால மனைவிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை தான் இது. அதன் பிறகே இவர்களுடைய திருமணம் நடந்திருக்கிறது. இந்த விஷயம் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படியும் ஒரு காதலா என வியக்க வைத்திருக்கிறது.

இதுவே அஜித், ஷாலினி மீது எந்த அளவுக்கு காதலுடன் இருந்திருக்கிறார் என்பதையும் தெரிய வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்த ஜோடி தங்களுடைய வாழ்க்கையை ரொமான்ஸாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த காதல் ஜோடி தங்களுடைய 23வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Also read: நம்பியவர்களை ஏமாற்றி திராட்டில் விட்ட அஜித்.. இஷ்டம் இல்லாததை செய்யும் ஏகே

Trending News