செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக் பாஸ் சீசன் 6 முதல் தலைவர் இவர்தான்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று தலைவருக்கான போட்டி நடந்தேறி உள்ளது. இதில் சாந்தி மாஸ்டர், ஜனனி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் தலைவர் போட்டிக்கான விளையாட்டில் பங்கு பெறுகிறார்கள். ஒரு கடிகாரத்தில் இரு கைகளைப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் யார் தாக்கு பிடிக்கிறார்களோ அவர்களே போட்டியில் வென்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

இந்த போட்டியில் முதலாவதாக சாந்தி வெளியேறுகிறார். அதன் பின்பு ஒரு மணி நேரம் கடந்த நிலையிலும் ஜிபி முத்து மற்றும் ஜனனி கடிகாரத்தை பிடித்து நிற்கிறார்கள். மேலும் இறுதியாக அசால்டாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் தலைவராக தலைவன் ஜி பி முத்து தேர்வாகிறார்.

Also Read : பிக்பாஸ்- 6 முதல்வார நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. வெளியேறும் சிடு மூஞ்சி போட்டியாளர்

சாதாரணமாகவே போட்டியாளர்களை வறுத்தெடுக்கும் ஜி பி முத்து தற்போது தலைவர் என்பதால் இந்த வாரம் படு ஜோராக வர இருக்கிறது. மேலும் ஜி பி முத்து இந்த வார பிக் பாஸ் தலைவர் என்பதால் அமுதவாணன் அவர் பின்னால் சென்று தலைவரே, தலைவரே என்று கூறி வருகிறார்.

அதுவும் டாஸ்க் வென்ற பின்பு பீர், பிரியாணி வாங்கி தருவதாக வாக்கு கொடுத்தாயே எங்கே என ஜி பி முத்துவை விடாமல் துரத்துகிறார் அமுதவாணன். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஜிபி முத்து இந்த தலைவர் பதவியே தனக்கு வேண்டாம் என தெரிந்து ஓடுகிறார்.

Also Read : வெளியேறப் போகும் ஜி பி முத்து.. அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு மற்றும் ஆர்மி

மேலும் பிக் பாஸ் வீட்டில் யார் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் தான் மற்ற ஹவுஸ்ஃபைட்ஸ் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் அடிக்கடி ஜி பி முத்து தான் தூங்கிக் கொண்டு பிக் பாஸ்யிடம் மாட்டிக்கொள்வார். இதனால் இந்த வாரம் முழுக்க ஜி பி முத்து தரமான செய்கை செய்ய உள்ளார்.

ஜி பி முத்து டிக் டாக் மூலம் பிரபலமானதால் பிக் பாஸ் வீட்டில் அவரால் தாக்குபிடிக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் இன்று தன்னுடைய முதல் போட்டியிலேயே அவர் வெற்றியடைந்தது பலருக்கு அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அளித்துள்ளது.

Also Read : மக்களை அதிகம் கவர்ந்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முதலிடத்தை பிடித்த தலைவர் ஜிபி முத்து

Trending News