தனுஷ் அனிருத் மீண்டும் மோதலா.? திருச்சிற்றம்பலத்திற்கு பிறகு இணையாத கூட்டணி, ஏன்.?

Dhanush-Aniruth: அனிருத் இன்று பிஸியான இசையமைப்பாளராக மாறி இருக்கிறார். இவருடைய கால்ஷீட்டை வாங்கிவிட்டு தான் ஹீரோவிடம் செல்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த அளவுக்கு இவர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் தற்போது அவர் கைவசம் கூலி, ஜெயிலர் 2, ஜனநாயகன் போன்ற படங்கள் இருக்கிறது.

இந்நிலையில் இவருக்கும் தனுசுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு வந்து விட்டதா? ஏன் திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு இவர்கள் இணையவில்லை? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

விசாரித்து பார்த்ததில் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஏற்கனவே மனக்கசப்பின் காரணமாக பிரிந்து மீண்டும் இணைந்தார்கள். ஆனாலும் அந்த பழைய நெருக்கம் இல்லையாம்.

தனுஷ் அனிருத் மீண்டும் மோதலா.?

ஆனால் இவர்கள் இணையாததற்கு அது காரணம் கிடையாது. அனிருத் இப்போது அதிகபட்ச சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருக்கிறார். அதேபோல் அவர் ஒரு படத்திற்கு இசையமைத்து முடிக்க 6 மாத காலங்கள் ஆகிறது.

சில சமயங்களில் அவருடைய தாமதத்தால் படம் தள்ளிப் போகும் நிலையும் இருக்கிறது. தனுசுக்கு இது செட் ஆகாது. அதனாலேயே ஏ ஆர் ரகுமான், ஜி வி பிரகாஷ் என அவர் ரூட்டை மாற்றிவிட்டார்.

அதேபோல் அனிருத்தின் சம்பளமே பல கோடி என்றால் தனுஷின் சம்பளம் மற்ற செலவுகள் என தயாரிப்பாளரால் சமாளிக்க முடியாது அதன் காரணமாகவே இந்த கூட்டணி சேரவில்லை என்கின்றனர்.

Leave a Comment