திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நல்லா இருந்த குடும்பத்திற்குள் நுழைந்த கவர்ச்சி புயல்.. குடும்பத்தை மறந்து நடிகர் எடுத்த முடிவு

Gossip: தற்போது அந்த காதல் ஜோடியின் பிரிவு செய்திதான் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் இப்படி ஒரு முடிவு எடுக்க காரணமே அவருடன் நடித்த பிரபல நடிகை தான் என்கின்றனர்.

அவர் நடிக்க வந்த இத்தனை வருடங்களில் பெரிய அளவில் எந்த கிசுகிசுவிலும் சிக்கியது கிடையாது. அப்படிப்பட்ட நடிகர் தற்போது வேறு ஒரு நடிகையின் மயக்கத்தில் இருக்கிறார் என்றால் யாராலும் நம்ப முடியவில்லை தான்.

ஆனால் அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக நடிகருக்கு ஏற்பட்ட விரக்தி நடிகையின் பக்கம் செல்ல வைத்திருக்கிறது. அந்த ஹீரோயின் நடிகருக்கு ஆறுதல் சொல்கிறேன் என ரொம்பவும் நெருக்கம் காட்டியிருக்கிறார்.

நடிகையுடன் டேட்டிங் செய்த நடிகர்

இதுதான் குடும்பத்திற்குள் சூறாவளியாக சுழற்றி அடித்திருக்கிறது. ஏற்கனவே நடிகரின் மனைவிக்கு அவர் மீது ரொம்பவும் பொசசிஸ் இருக்கிறது. அதன் காரணமாக சில கேள்விகளை அவர் கேட்க அதற்கு சந்தேகம் என பெயர் வைத்து நடிகர் வெறுப்பு காட்டி இருக்கிறார்.

அதில் இந்த நடிகையின் சமாச்சாரமும் தம்பதிகளுக்குள் பெரும் சண்டையை மூட்டி இருக்கிறது. இதனால் பொறுத்து பார்த்த நடிகர் தற்போது இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம். இதன் பிறகு தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நினைப்புதான்.

ஆனால் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்காத மனைவி உடனே பதிலடியும் கொடுத்திருக்கிறார். இதனால் நடிகர் பக்கம் ஒட்டு மொத்த பிரச்சனையும் திரும்பி இருக்கிறது. இதில் இன்னும் கூட சில விவகாரங்கள் வெளிவரும் என்கின்றனர்.

நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்த நடிகை

Trending News