புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நிஜமான பரியேறும் பெருமாளாக அவமானப்பட்டவர் இவர்தான்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

Pariyerum Perumal: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை ஆடிவரும் மாமன்னன் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவருடைய படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாகத்தான் இருக்கிறது.

அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாமன்னன் படத்தையும் வெற்றியாக்கி ஹட்ரிக் வெற்றி கொடுத்துள்ளார். இந்நிலையில் மாரி செல்வராஜ் முதல் படமான பரியேறும் பெருமாள் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

Also Read : பராசக்தி தொடங்கி மாமன்னன் வரை.. பா ரஞ்சித்திற்கு நாசுக்காக பதிலடி கொடுத்த உதயநிதி

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவன் வந்துள்ளதால் எத்தகைய பிரச்சனையை சந்திக்கிறான் என்பதை கதிரின் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களுக்கு காட்டு இருந்தார். இப்படி எல்லாமா ஒருவரை சித்திரவதை செய்வார்கள் என்று யோசித்தால் நிஜ வாழ்க்கையிலேயே இந்த பிரச்சனையை ஒருவர் சந்தித்திருக்கிறாராம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாரிமுத்து பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்தார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது, இந்த படத்தில் காதலி அழைத்ததால் கடன் வாங்கி சட்டை போட்டுக்கொண்டு கதிர் ஒரு கல்யாணத்திற்கு வருவார். அந்த காட்சியை எடுக்கும் போது மாரி செல்வராஜ் பைத்தியம் பிடித்தது போல் அங்கும் இங்கும் திரிந்தாரம்.

Also Read : ஆதி குணசேகரனை அசிங்கப்படுத்திய சில்வண்டு.. பெரிய ஆப்பு, சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

மேலும் வந்து படப்பிடிப்பில் எல்லோரையுமே திட்டுவாராம். ஏன் இப்படி செய்கிறார் என்று மாரிமுத்து அவரிடம் கேட்கும் போது மாரி செல்வராஜின் சொந்த வாழ்க்கையில் இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாம். தனது காதலியை அழைத்ததால் ஒரு திருமணத்திற்கு சென்றபோது இப்படி அவமானத்தை சந்தித்து இருக்கிறார்.

அதை நினைத்து அந்த காட்சியை எடுக்கும் போது அவரை மீறி கோபம் வந்திருக்கிறது என்று மாரிமுத்து கூறியிருந்தார். இவ்வாறு மாரி செல்வராஜ் கதையை பிரதிபலிக்கும் விதமாக பரியேறும் பெருமாள் படத்தில் கதிரின் கதாபாத்திரத்தை எடுத்து இருக்கிறார். மேலும் தொடர்ந்து அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வுகளை படங்களில் கொடுத்து வருகிறார்.

Also Read : உதயநிதியின் சினிமா கேரியரிலேயே மாமன்னன் தான் அதிக வசூலாம்.. மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

Trending News