சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அக்டோபர் 10 நேருக்கு நேர் மோதும் கங்குவா, வேட்டையன்.. சாதகமும் பாதகமும் என்ன.? முழு விவரம்

Rajini-Suriya: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின் வேட்டையனும் அதே நாளில் வர இருக்கிறது.

இது எதிர்பார்த்தது தான் என்றாலும் தீபாவளிக்கு வருமா என்ற ஒரு சந்தேகமும் இருந்தது. அதற்கேற்றார் போல் கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வேட்டையன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக பிளான் செய்யப்பட்டது. அதனால் தான் அக்டோபர் 10ஆம் தேதி எங்கள் படத்தை வெளியிட முடிவு செய்தோம்.

சூப்பர் ஸ்டாருடன் மோதும் எண்ணமெல்லாம் எங்களுக்கு கிடையாது என கூறியிருந்தார். ஆனால் அவருடைய நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கும் வகையில் அதே தேதியை வேட்டையன் டீம் லாக் செய்து இருக்கிறது.

இதில் எந்த படம் ரேசில் ஜெயிக்கும்? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? என்ற பேச்சுக்கள் இப்போது எழுந்துள்ளது. அதன்படி சூர்யா ஹீரோவாக நடித்து படம் வெளியாகி சில வருடங்கள் ஆகிவிட்டது. அதனாலயே கங்குவாவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

அக்டோபர் 10 ரேஸில் வெல்ல போவது யார்.?

அதேபோல் உலக அளவில் இப்படம் பல மொழிகளில் வெளிவர இருக்கிறது. மேலும் டிரெய்லர் பாடல்கள் என அனைத்தும் ஹிட் ஆகிவிட்டது. அதே சமயம் வேட்டையன் படத்தில் இருந்து வெறும் போஸ்டர் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

ஆனால் கங்குவாவை விட இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம். இதற்கு முக்கிய காரணம் ரஜினி, அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து நடித்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் இணைந்துள்ளனர்.

அதேபோல் ஜெய்பீம் ஞானவேல் சூப்பர் ஸ்டாரை இயக்குவதும் ஒரு படி ஆர்வத்தை கூட்டி இருக்கிறது. அது மட்டும் இன்றி கங்குவா மூலம் சூர்யாவுக்கு ஹிந்தியில் புதிய மார்க்கெட் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் ஹிந்தி ரசிகர்களை பொறுத்தவரையில் வேட்டையன் படத்தை ஆதரிப்பதற்கே அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த படங்களின் ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேருக்கு நேர் மோதும் கங்குவா, வேட்டையன்

Trending News