செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஜய் டிவியின் அரசியலுக்கு பலியான ராணவ்.. எலிமினேஷனுக்கு காரணமான விஜய் சேதுபதி, நடந்தது என்ன.?

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ராணவ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இது நிச்சயம் நியாயம் இல்லாதது என அவரின் ரசிகர்கள் வருத்தத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல் நேற்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கூட தங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டனர். இது ஒரு புறம் இருக்க ஓட்டு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருந்தது ஜாக்லின் மஞ்சரி தான்.

எப்படி ராணவ் வெளியேற்றப்பட்டார் என்பதுதான் அனைவரின் கேள்வி. இதற்கு பின்னால் விஜய் டிவியின் ஒரு அரசியல் நடந்திருக்கிறது.

அதாவது ராணவ் விஷாலிடம் ஒரு எபிசோடில் விஜய் சேதுபதி தன்னிடம் கேட்ட கேள்வி குறித்து விவாதித்து இருக்கிறார். அப்போது அந்த கேள்வி தன்னை எரிச்சல் படுத்தியதாக கூறியிருக்கிறார்.

எலிமினேஷனுக்கு காரணமான விஜய் சேதுபதி

இதுதான் அவருடைய எலிமினேஷனுக்கு காரணம் என அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது. ஆனாலும் நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி அவரை வரவேற்று அனுப்பி வைத்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

இருந்தாலும் இந்த எலிமினேஷனுக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே மூன்றாவது சீசனில் சரவணன் வெளியேறியது கூட இப்படி ஒரு காரணத்துக்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News