ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கூடாரத்தை காலி செய்யும் நம்பர் நடிகை.. போற போக்குல சம்பவம் செய்ய காரணம் இதுதான்

Gossip: நம்பர் நடிகை ஒல்லி நடிகர் விவகாரம் இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. நடிகர் தரப்பிலிருந்து இந்த விவகாரத்தை கண்டு கொண்டது போல் தெரியவில்லை. ஆனாலும் நடிகை தன் ஒட்டுமொத்த கோபத்தையும் இறக்கி வைத்துள்ளார்.

ஆனாலும் இவ்வளவு வன்மம் ஆகாது என நடிகையின் பெயரும் டேமேஜ் ஆகியிருக்கிறது. ஆனால் இதெல்லாம் தெரிந்துதான் அவர் எந்த அளவுக்கு சம்பவம் செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் கசிந்து உள்ளது.

அதாவது நம்பர் நடிகை இப்போது மாஸ்டர் பிளான் போட்டு கை நிறைய காசு பார்க்க திட்டமிட்டுள்ளார். காப்பி இயக்குனர் மூலம் பாலிவுட் பக்கமும் அறிமுகம் ஆகிவிட்டார். அதை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொள்ள அவர் திட்டம் போட்டுள்ளாராம்.

நம்பர் நடிகை போட்ட பிளான்

அதனால் தற்போது இருக்கும் இடத்தை காலி செய்து விட்டு மொத்தமாக அங்கேயே செட்டில் ஆகும் முடிவில் அவர் இருக்கிறாராம். ஏற்கனவே சமத்து நடிகை வெளிச்ச நடிகர் என எல்லோரும் அங்கு தான் டென்ட் போட்டுள்ளனர்.

அந்த வரிசையில் நம்பர் நடிகையும் பாலிவுட் வாய்ப்பை பிடிக்க தீயாக வேலை செய்து வருகிறாராம். அதனால் தான் சோசியல் மீடியாவில் தாராளமான புகைப்படங்களை அவர் இறக்கி வருவதாக சலசலத்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி கணவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில் அதற்கான முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். காப்பி இயக்குனர் தயாரிப்பில் விரைவில் பட அறிவிப்பு வரும் என்கின்றனர். இப்படி மாஸ்டர் பிளான் போட்டுள்ள நடிகை போற போக்கில் ஒல்லி நடிகரை டேமேஜ் செய்து விட்டார்.

Trending News