Santhanam: விஜய் டிவியிலிருந்து வந்த பிரபலங்கள் தற்போது ஹீரோவாக ஜொலிக்க தொடங்கி விட்டனர். ஆனால் காமெடியனாக தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கி வெற்றியும் கண்டவர் சந்தானம்.
இடையில் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். இனிமே இப்படித்தான் என களமிறங்கிய அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு ஒன்றும் கிடைக்கவில்லை.
இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார். அதில் ஒரு சில படங்கள் தான் முதலுக்கு மோசம் இல்லாமல் இருந்தது. மற்றவை நஷ்ட கணக்கில் தான் சேர்ந்தது.
இதனாலேயே சந்தானத்தை ஹீரோவாக்க தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்கள். அதனால் தற்போது அவர் ஹீரோ மாஸ்க்கை கழட்டிவிட்டு மீண்டும் காமெடியனாக முடிவெடுத்து விட்டாராம்.
ஹீரோ மாஸ்கை கழட்டும் சந்தானம்
ஏனென்றால் வாங்குன அடி அப்படி. இப்படியே இருந்தால் செல்லா காசாக போய்விடுவோம். தன்னுடைய இடம் யோகி பாபு சூரி ஆகியோரால் நிரப்பப்பட்டு விட்டது என்பது அவருக்கு தெரியும்.
அதில் சூரி இப்போது ஹீரோவாகிவிட்டார். அவரை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். நல்ல நடிகன் என்ற பெயரையும் அவர் வாங்கி விட்டார்.
இதையெல்லாம் பார்த்த சந்தானம் தற்போது பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் காமெடியனாக நடிக்க சம்மதித்து விட்டாராம். அதே போல் இரண்டு ஹீரோ வாய்ப்புகளையும் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என அவர் கூறியிருந்தார். அதன்படி இனி சோலோ ஹீரோவுக்கு நோ காமெடி, இரண்டாவது ஹீரோ இப்படி நடிக்க முடிவெடுத்துவிட்டார்.
அவருடைய இந்த புத்திசாலித்தனமான முடிவு நிச்சயம் வரவேற்கப்படும். அதனால் இனி சந்தானத்தின் கவுண்டர் காமெடியையும் அட்ராசிட்டியையும் நாம் ரசிக்க தயாராகலாம்.