புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மாரி செல்வராஜை ரிஜெக்ட் செய்த இளையராஜா.. அருண் மாதேஸ்வரன் என்ட்ரியின் பின்னணி

Ilayaraja: பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த இளையராஜா பயோபிக்கின் அறிவிப்பு நேற்று வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது மட்டும் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க இயக்குனர் எப்படி கதையை கொண்டு செல்வார் என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

அதனாலேயே வேறு யாராவது படத்தை இயக்கலாமே என்ற கருத்துக்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க இளையராஜாவின் முடிவு தான்.

வாழ்க்கை வரலாறு உருவாக போகிறது என்றதுமே தனுஷ் சில இயக்குனர்களை இளையராஜாவிடம் அனுப்பி இருக்கிறார். அதில் முக்கியமானவர் தான் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜை நிராகரித்த இளையராஜா

இவரைத்தான் இளையராஜா தேர்ந்தெடுப்பார் என தனுஷ் கூட நம்பி இருக்கிறார். ஆனால் இசைஞானி வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம். இதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஆச்சரியமாக இருக்கிறது.

அதாவது இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இளையராஜாவை ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அவர் இப்படி ஒரு எண்ணத்துடன் இருந்திருப்பது அதிர்ச்சி தான். அதன் பிறகு தான் அருண் மாதேஸ்வரனை தனுஷ் அனுப்பி இருக்கிறார்.

அவருடைய நடவடிக்கைகளையும் பணிவையும் பார்த்த இசை ஞானிக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. அதன் பிறகு தான் அவரே இயக்கட்டும் என உறுதி செய்திருக்கின்றனர். இதை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இளையராஜா என்ன சொல்கிறாரோ அதைத்தான் இயக்குனர் படமாக எடுக்க போகிறார். அதை தாண்டி இந்த வாழ்க்கை வரலாறு பல சர்ச்சைகளுக்கு விடையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News