Prashanth: பிரசாந்த் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை அமோகமாக தொடங்கி விட்டார். கோட் படம் வந்த கையோடு பல வருடங்களாக இழுத்தடித்த அந்தகன் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
அதை அடுத்து அவர் படத்தில் நடிப்பதற்கு ஏகப்பட்ட கதைகளை கேட்டிருக்கிறார். அதன் முடிவில் தற்போது ஹரியுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இணைகின்றனர். அந்த அறிவிப்பு பிரசாந்த் பிறந்தநாளில் வெளியானது. அதேபோல் படத்தின் ஹீரோயின் கயாடு லோகர் என்ற செய்தியும் கசிந்துள்ளது.
இது தவிர இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்களாம். இந்த சூழலில் ஹரியுடன் கூட்டணி இணைவதற்கு முன் தியாகராஜன் சுந்தர் சி, மகிழ் திருமேனி ஆகியோரையும் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்.
ஹரியை செலக்ட் செய்ய காரணம் என்ன.?
அதில் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அதனால் தற்போது அவரை பிடிப்பது இயலாத காரியம். அவருக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் எப்படியும் வின்னர் 2 படம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதை அடுத்து விடாமுயற்சி படத்தால் மகிழ் திருமேனி பக்கம் அவர்கள் செல்லவில்லை. அதன் பின்பு தான் ஹரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி இப்படம் ஒரு போலீஸ் கதையாக இருக்கும் என தெரிகிறது. ஹரி என்றாலே ஆக்சன் தானே. அதே சமயம் லவ் ரொமான்ஸ் ஆகியவற்றுக்கும் பஞ்சமில்லாமல் படம் இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளது.