சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஊருக்குள்ள 1008 பிரச்சனை இருக்கு அதெல்லாம் கண்ணுக்கு தெரியல.! சட்டசபையில் அவமானம், ஆளுநர் ரவி வெளியேறிய காரணம்

Governor R N Ravi Exit From TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் ஆளுநர் தன்னுடைய உரையை முழுதாக படிக்காமல் புறக்கணித்ததோடு இரண்டு நிமிடத்தில் வெளிநடப்பு செய்தது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. இதற்கு அவர் சொன்ன காரணமும் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வருகிறது.

அதாவது சட்டசபை நிகழ்வின் ஆரம்பத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கூறியிருந்தேன். அதேபோல் தமிழக அரசின் உரையில் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் படிக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கு தற்போது அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் கிளம்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் GetOutRavi என்ற ஹேஷ் டேக்கும் ட்ரண்ட் ஆகி வருகிறது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதன் பிறகு சட்டமன்ற நடவடிக்கைகள், பின்னர் தேசிய கீதம் என்பது தான் இதுவரை சட்டப்பேரவையில் பின்பற்றப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

Also read: மொத்தமாய் கலைஞர் டிவி மீது விழுந்த பழி.. உதயநிதி கூட கண்டுக்காமல் விட்ட நூற்றாண்டு விழா

ஆனால் ஆளுநர் தமிழ் தாய் வாழ்த்து இசைக்க கூடாது. தேசிய கீதம் மட்டுமே இசைக்க வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க சபாநாயகர் அப்பாவு கோட்சே, சாவர்க்கர் வழிவந்த உங்களுக்கு நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என பேசியதும் வைரலாகி வருகிறது.

இதுதான் ஆளுநரின் வெளிநடப்பு முக்கிய காரணம். இதை குறிப்பிடும் அமைச்சர்கள் ஆளுநரின் வெளிநடப்புக்கு தங்கள் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேறி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் ஆளுநர் வெளிநடப்பு செய்து விட்டதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

Also read: விஜய்க்கு எதிராக எழும் கடும் எதிர்ப்பு.. அரசியல் என்ட்ரியால் மொத்த ரசிகர் மன்றமும் கலைப்பு

Trending News