தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்த.. விஜய்க்கு ஜோடியான மீனாட்சி சவுத்ரி, காரணம் இதுதான்

Vijay-Meenakshi chaudhary: லியோ படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் தளபதி 68 அலப்பறையும் அதிகமாகத்தான் இருக்கிறது. விஜய்யை இயக்க வேண்டும் என்ற பல நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ள வெங்கட் பிரபு இதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம்.

அதில் ஒன்று தான் நட்சத்திரங்களின் தேர்வு. பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் என டாப் ஹீரோக்கள் இதில் நடிக்க இருக்கும் நிலையில் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரியும் இந்த கூட்டணியில் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: வெறிபிடித்த ஓநாயுடன் மோதும் லியோ.. ஆக்ரோஷமான போஸ்டரோடு வெளிவந்த ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ஏனென்றால் 26 வயதான இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்தால் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்ற கருத்துக்களும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. ஆனால் இவர் இந்த படத்தில் நடிக்க வந்தது ஒரு சுவாரசியமான கதை தான். தெலுங்கு திரை உலகில் பிரபலமாக இருக்கும் இவர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார்.

அதேபோன்று ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் உள்ளிட்ட சில படங்களும் இவர் கைவசம் இருக்கிறது. இதுதான் விஜய்யின் பார்வை இவர் பக்கம் திரும்புவதற்கு முதல் காரணம். அதாவது மகேஷ் பாபு எது செய்தாலும் அதை அப்படியே பின்பற்றும் பழக்கம் அவருக்கு உண்டு.

Also read: வெங்கட் பிரபு அண்ட் கோ-வை வெட்டிவிட்ட விஜய்.. தளபதி 68 காக செய்யும் தியாகம்

அந்த வகையில் தெலுங்கில் அவர் நடித்த பல படங்களை விஜய் தமிழில் ரீமேக் செய்து நடித்திருக்கிறார். அப்படித்தான் இப்போதும் மகேஷ் பாபுவின் ஹீரோயின் என்றதும் தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்தை என்று தளபதி 68 நாயகியாக கமிட் செய்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 23 வயது வித்தியாசத்தில் இருக்கும் இந்த ஜோடி எந்த அளவுக்கு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்வார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் லியோ ரிலீசுக்கு பிறகு தளபதி 68 பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்து ஆச்சரியப்படுத்த இருக்கிறது.

Also read: விஜய்யை சீண்டிப் பார்க்கும் கலாநிதி.. லியோ போஸ்டரால் ஏற்பட்ட குழப்பம்