புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூர்யா மும்பையில் வீடு வாங்க இதுதான் காரணம்.. ஜோதிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி மும்பையில் சூர்யா வீடு வாங்கியது தான். அதாவது சினிமாவைச் சார்ந்த பிரபலங்கள் பல இடங்களில் சொத்து வாங்குவது சர்வ சாதாரணம் தான். ஆனால் சூர்யா வாங்கியது ஏன் பரபரப்பாக பேசப்படுகிறது என்றால் மும்பையில் வாங்கி உள்ளார் என்பதால் தான்.

ஏனென்றால் ஜோதிகாவின் சொந்த ஊரான மும்பையில் சூர்யா செட்டில் ஆக உள்ளாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அந்த சொகுசு வீட்டின் மதிப்பு 70 கோடி என்றும் ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூர்யா மும்பையில் வீடு வாங்குவதற்கான காரணம் ஜோதிகா தானாம்.

Also Read : சிம்ரனுக்காக மேனேஜர் வேலையை விட்டு வந்த சூர்யா.. முதல் பட ரகசியத்தை உடைத்த குணசேகரன்

அதாவது சமீபத்தில் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் இப்போது தான் தெரிந்தது நான்கு வருடங்களாக அஜித்தின் தந்தை உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார் என்ற விஷயம். அதே நிலைமை தான் ஜோதிகாவின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளதாம்.

அதாவது ஜோதிகாவின் தாய் அல்லது தந்தை ஒருவர் உடல்நிலை முடியாமல் உள்ளாராம். அவரைப் பார்த்துக் கொள்ளதான் ஜோதிகா மும்பையில் தங்கி உள்ளார். மேலும் குழந்தைகளின் படிப்பையும் மும்பையிலேயே மேற்கொள்ளலாம் என்ற முடிவை சூர்யா குடும்பம் எடுத்துள்ளனராம்.

Also Read : சூர்யாவுக்கு டஃப் கொடுக்க வரும் வரலாற்று நாயகன்.. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்

அதனால் தான் சூர்யா இப்போது மும்பையில் வீடு வாங்கி உள்ளார். மேலும் தற்காலிகமாக தான் சூர்யா மும்பையில் இருக்கிறார் என்றும் ஒரு சொத்தாக தான் வீடு வாங்கியுள்ளார் என்று அவரது நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகை முன்னிட்டு இப்படம் ரிலீஸாக இருக்கிறது. அதேபோல் ஜோதிகாவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டிலும் ஜோதிகா ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Also Read : வேள்பாரியில் சூர்யா இல்லை.. முரட்டுத்தனமான ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் ஷங்கர்

Trending News