செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நூலிலையில் உயிர் தப்பிய சூர்யா.. கங்குவா படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட காரணம் இதுதான்

Surya in Kanguva Shooting Cancelled: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது கங்குவா படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான லுக்குடன் நடித்து வருகிறார். சூர்யா பொருத்தவரை ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி. அந்த வகையில் கங்குவா படம் ஆரம்பித்ததில் இருந்தே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

இதனால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே EVP Film City-யில் நடைபெற்ற வந்துள்ளது. ஆனால் தற்சமயம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காரணம் சண்டை காட்சியின் போது கேமரா ரோப் அருந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்துள்ளது.

அந்த நேரத்தில் ஸ்டாண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், சூரியாவை இழுத்து உடனடியாக காப்பாற்றி விட்டார். இருந்தாலும் சூர்யாவுக்கு தற்போது லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். இதில் பெரிய ரிஸ்க் எடுத்ததால் சூர்யா நூலிலையில் உயிர் தப்பினார்.

Also read: கங்குவாவுக்காக ரிஸ்க் எடுக்கும் சூர்யாவின் 3 மாஸ் லுக்.. ஆறு மாசத்துல 6 பேக், வெயிட் லாஸ்ன்னு மிரட்டிட்டாரு

இதனால் ரொம்பவே அப்செட்டான சூர்யா படப்பிடிப்பை கேன்சல் பண்ணி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களும் சூர்யாவிற்கு என்ன ஆச்சு என்று அதிர்ச்சியில் தவித்து வருகிறார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தும் நேற்று இரவு 11 மணிக்கு படப்பிடிப்பின் போது நடந்திருக்கிறது. இந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.

கூடிய விரைவில் சூர்யா எந்த பிரச்சினையும் இல்லாமல் குணமாகி விடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் ஒரிஜினலாக ரிஸ்க் எடுத்து நடித்தாலும் ரொம்பவே கவனமாகவும், பாதுகாப்பாகவும் நடிக்க வேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

Also read: ஸ்டூடியோ கிரீன் லைன் அப்பில் 19 படங்களா.? மறைமுகமாக பல ஆயிரம் கோடி முதலீட்டில் சூர்யா

Trending News