வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் செண்டிமெண்ட் படத்தில் நடிக்க இதுதான் காரணம்.. வாரிசு படக்குழு போட்ட பலே திட்டம்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.

இந்நிலையில் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, சங்கீதா, குஷ்பு, பிரகாஷ்ராஜ் ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றதிலிருந்து தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படமும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக அமைந்திருந்தது. ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் ஆக்ஷன் படங்களை தவிர்த்து சென்டிமென்ட் படத்தில் நடிக்கலாம் என்ற யோசனையில் தான் வாரிசு படத்தில் நடிக்க விஜய் சம்மதித்தார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

மேலும் வாரிசு படம் பக்காவான குடும்ப படமாம். இதனால்தான் ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் விஜய்யின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற ஜானரில் இருக்கும் என இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவும் பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் வாரிசு படம் அப்பா, அண்ணன் என ஒரு குடும்பப் படமாக எடுத்தால் கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்பதால் அந்த ஜானரில் எடுக்கப்படுகிறது. மேலும் வாரிசு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருமே தெலுங்கு சினிமாவை சார்ந்தவர்கள்.

மேலும் தமிழ் சினிமா ரசிகர்களும் தொடர்ந்து விஜய்யை முழு ஆக்ஷன் ஹீரோவாகவே பார்த்து வருகிறார்கள். ஒரு வித்தியாசமாக காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த படத்தில் விஜய் நடிக்கலாம் என யோசித்த வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

Trending News