திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மார்க் ஆண்டனி டீசர் எல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்.. விஷால் விஜய்யுடன் திடீரென்று ஒட்டிக்கொண்ட காரணம் இதுதான்

விஜய்யை விஷால் திடீரென சந்தித்து மார்க் ஆண்டனி டீசரை வெளியிட அவரை கேட்டுக் கொண்டதால் விஜய்யும் வெளியிட்டார். எதற்காக திடீரென விஷால் விஜய்யை சந்திக்க வேண்டும் டீசரை வெளியிட சொல்ல வேண்டும் என பல பேர் கேள்வி எழுப்பினர். விஷால் எது செய்தாலும் காரணமில்லாமல் செய்ய மாட்டார்.

விஜய் இன்னும் ஒரு சில மாதங்களில் அரசியல் பற்றி சில விஷயங்களை அறிவிக்கப் போகிறார். ஏனென்றால் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தன்னுடைய ரசிகர் மன்றத்தை வைத்து ரகசியமாக பல வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை புரிந்து கொண்ட விஷால் நாசுக்காக விஜய்யை சந்தித்து டீசரையும் வெளியிட்டு, அந்த சந்திப்பின் மூலம் விஜய்யின் அரசியல் பயணத்தில் தான் இடம்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: இமேஜே போனாலும் துணிந்து நடித்த 5 நடிகர்கள்.. ஷில்பாவாக சொக்க வைத்த விஜய் சேதுபதி

இதனால் விஜய்க்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டு, விஜய் செல்வதை கேட்டுக்கொண்டு அவரது மனதில் இடத்தைப் பிடித்து விட்டார். விஜய்யும் சரி என்று தலை அசைத்து விட்டார்.  விஷால் ஏற்கனவே தமிழகத்தின் ஆளும் கட்சியின் பக்கம் சென்றார். அவருடைய நெருங்கிய நண்பருமான நடிகர் தான், அந்தக் கட்சியில் தற்போது முக்கிய பதவியில் இருப்பதால் தனக்கும் அது போன்ற ஒரு பதவி கிடைத்துவிடும் என ஆசைப்பட்டார்.

ஆனால் பெரிய விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை. அதனால் புதிதாக தொடங்கும் இளைய தளபதியின் கட்சியில் சேர்ந்தால் கண்டிப்பாக முக்கிய பதவி கிடைக்கும் என நம்புகிறார். அதனால் தான் விஜய்யை திடீரென்று சந்தித்து பேசி இருக்கிறார்.  ஆனால் அது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக மார்க் ஆண்டனியின் டீசரை வெளியிடுவதற்காக சந்தித்ததாக பூசி மொழுகினர்.

Also Read: ஒரே ஒரு சக்சஸ் எப்படியாவது கொடுத்தே ஆகணும்.. விஜய்யிடம் கெஞ்சி குத்தாடும் பரிதாப நிலையில் விஷால்

விஷால் தற்போது நடிகர் சங்க பொறுப்புகளை மற்ற நடிகர்களின் கையில் கொடுத்துவிட்டார். மேலும் ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கியதால் இனி அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறாராம். அது மட்டுமல்ல தன்னுடைய மேனேஜரையும் மாற்றியுள்ளார்.

இப்போது விஷாலின் மேனேஜர் ஏற்கனவே விஜய்யின் மேனேஜராக இருந்தவர். அவருடைய வழிகாட்டுதலின்படி தான் தற்போது விஷால் ஒவ்வொரு வேலையும் செய்து கொண்டிருக்கிறார். அதில் முக்கியமானது தளபதியை சந்தித்து அவருடைய அரசியலில் ஒட்டிக்கொள்வதும் ஒன்று.

Also Read: விஷாலை தூக்கி விட நினைக்கும் தளபதி.. மார்க் ஆண்டனி படத்திற்காக விஜய் செய்த காரியம்

Trending News