Actor Marimuthu: இன்னும் எத்தனை இழப்புகளை தான் பார்க்க வேண்டுமோ என்ற வருத்தம் தான் இப்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் மரணம் பலரையும் உலுக்கி எடுத்துள்ளது.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ள அவருக்கு இப்போது சின்னத்திரை, பெரியத்திரை பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய கண்ணீர் அஞ்சலியை நேரில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவருடைய இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்ற தகவல் வெளிவந்துள்ளது.
Also read: 57 வயது எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரையுலகம்
அதாவது மாரிமுத்து வழக்கம் போல இன்று எதிர்நீச்சல் டப்பிங் வேலைக்காக சென்று இருக்கிறார். அங்கு ஞானம் கேரக்டரில் நடிக்கும் கமலேஷும் டப்பிங் பேசுவதற்கு வந்திருக்கிறார். அப்போது மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே அசௌகரியமாக இருக்கிறது என்று வெளியில் சென்று இருக்கிறார்.
உடனே அங்கிருந்தவர்கள் கொஞ்ச நேரம் காற்று வாங்கிவிட்டு வந்துவிடுவார் என்று நினைத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து கமலேஷ் டப்பிங் முடித்து விட்டு வெளியில் வந்து பார்க்கும்போது மாரிமுத்து அங்கு இல்லையாம்.
Also read: இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி
தனக்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்த உடனேயே அவர் யாரையும் கூப்பிடாமல் தன் உயிரை காப்பாற்ற தானே மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்றிருக்கிறார். அங்கிருந்து சூர்யா ஹாஸ்பிடல் சென்றவருக்கு சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர் மரணித்து விட்டார் என கமலேஷ் வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.
இவ்வாறாக கண் இமைக்கும் நேரத்தில் நம்மை விட்டு சென்ற மாரிமுத்துவின் இழப்பு நிச்சயம் ஈடுகட்ட முடியாததாகவே இருக்கிறது. அதிலும் அவருடைய கடைசி நிமிடங்கள் உச்சகட்ட வேதனையை கொடுத்துள்ளது. அவருடைய ஆன்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிரார்த்திப்போம்.
Also read: தப்பா பேசிட்டேன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட மாரிமுத்து.. என்னை ஆள விடுங்க என தெறித்து ஓடிய சம்பவம்