திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க பதட்டத்தில் விஜய் செய்த காரியம்.. துணிவை ஜெயிச்சே ஆகனுமாம்

வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு மற்றும் துணிவு படத்தின் மூலம் யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை விஜயும் அஜித்தும் நிரூபிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் மறைமுகமாக ப்ரோமோஷன் வேலைகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

அதிலும் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க பதட்டத்தில் விஜய், கொஞ்சம் அதிகமாகவே இதில் ஈடுபாடு காண்பித்து எந்தெந்த வழிகளில் எல்லாம் வாரிசு படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என தீவிரமாக யோசித்து செயல்படுகிறார். இதனால் முக்கிய நகரங்களில் 400 பஸ், 4 ரயிலை குத்தகைக்கு எடுத்து,  அதில் வாரிசு படத்தின் அவருடைய போஸ்டரை ஒட்டுகின்றனர்.

Also Read: விஜய்யை பார்த்து பயந்த போனி கபூர்.. ஒரே வார்த்தையால் தைரியம் கொடுத்த அஜித்

அதுமட்டுமில்லாமல் நகர் எங்கிலும் பெரிய பெரிய பேனர்களை வைத்து அசத்துகிறார். அதிலும் இப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தொடர்ச்சியாக பிரியாணி விருந்துகளை வழங்கி உற்சாகப்படுத்துகிறார். ஏற்கனவே கடந்த மாதம் பனையூரில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி அளித்து அனைவரையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இப்போது மறுபடியும் பனையூரில் அடுப்பை பற்ற வைத்து, கறி விருந்து வழங்கி ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒரு பிடி புடிக்க வைத்திருக்கிறார். இது அரசியல் கூட்டம் அல்ல படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று இந்த கூட்டம் நடைபெறுகிறது. இவருடைய இந்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் பல விதங்களில் விமர்சிக்கப்படுகிறது.

Also Read: 100 கோடி வசூலை பார்த்தவுடனே விஜய்யுடன் கூட்டணியா? யாரும் எதிர்பார்க்காத மெகா காம்போ

அதிலும் துணிவை வென்றே ஆக வேண்டும் என்ற பதட்டத்தில் விஜய் இப்படிப்பட்ட வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அந்த பயம் இருக்கட்டும் என்று அஜித் ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறன் நக்கலடிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவு செய்து இருக்கின்றனர்.

இருப்பினும் அஜித்தின் துணிவு படத்தை தூக்கி வீச வேண்டும் என்று பின்புலத்தில் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.  தற்போது விஜய், தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை கொம்பு சீழ்வீட்டால் போதும் என்று மறுபுறம் அவர்களுக்கு தடபுடலாக விருந்தளித்து சொக்கு பொடி போட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: அதிக எதிர்பார்ப்புடன் வர இருக்கும் 6 படங்கள்.. விஜய், அஜித்தை ஓரம்கட்ட வரும் கமல்

Trending News