வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லோகேஷ் இடம் இந்த ஸ்டைல் வியப்பா இருந்துச்சு.. விஜய்யின் அப்பா கூறிய சீக்ரெட்

Lokesh Kanagaraj: தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் டாப் டாப் நடிகர்களின் விருப்பமான இயக்குனரின் பட்டியலில் லோகேஷ் இருக்கிறார். ஆனால் தமிழிலேயே அவருக்கு எக்கச்சக்க படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இப்போது விஜய்யின் லியோ படத்தை எடுத்து வருகிறார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த படத்திற்காக லோகேஷ் உழைத்துள்ளார். இன்னும் பத்து நாட்களில் லியோ படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் அதற்குப்பின் மூன்று மாதங்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அக்டோபர் மாதம் லியோ படம் திரைக்கு வர இருக்கிறது.

Also Read : வெளியில் கசிந்த லோகேஷ் ரஜினி பட அப்டேட்.. தலைவர் கொடுத்த செம ஐடியா

இந்த சூழலில் லோக்கேஷின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதாக விஜய்யின் அப்பா கூறியிருக்கிறார். அதாவது லியோ படத்தில் விஜய்யின் தந்தையாக பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இவர் தமிழ் இயக்குனர் ஒருவரை பார்த்து வியந்துள்ள விஷயம் தான் இப்போது கோலிவுட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது லோகேஷ் ஒரு சீனுக்கும் அடுத்த சீனுக்கும் உள்ள இடைவெளி நேரத்தில் கூட ஏதாவது யோசித்துக் கொண்டே இருப்பாராம். அதுமட்டுமின்றி எல்லா பக்கமும் கேமரா வைக்காமல் தனக்கு எது தேவையோ அந்த இடத்தில் மட்டுமே கேமராவை பயன்படுத்தக் கொள்வாராம். மேலும் எடுத்த சீனையை மீண்டும் மீண்டும் எடுக்க மாட்டாராம்.

Also Read : உருவகேலியால் கர்வமாய் மாறிய ஹீரோ.. லியோ செட்டில் காட்டும் ஓவர் ஆட்டிட்யூட்

ஏனென்றால் ஒரே காட்சியை மறுபடியும் எடுத்தால் ஒரு கட்டத்திற்கு மேல் யாராக இருந்தாலும் அலுப்பு வரக்கூடும். ஆகையால் சில டேக்குகளில் காட்சிகளை முடித்து விடுவாராம். அவருடைய சில நுணுக்கமான விஷயங்களும் தன்னைக் கவர்ந்ததாக தயாரிப்பாளர் லலித்திடம் சஞ்சய் தத் கூறி இருக்கிறார்.

பாலிவுட் நடிகரிடம் இருந்து லோகேஷ் இவ்வாறு பாராட்டு வாங்கியது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் எப்போதுமே கலகலப்பாக எடுத்து செல்வாராம். கண்டிப்பாக லியோ படம் மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கொடுத்துள்ளார் சஞ்சய் தத்.

Also Read : லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்

Trending News