வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கமர்சியல் கிங்ஸ் இடையே நடக்கப் போகும் போட்டி.. அரண்மனை 4 க்கு போட்டியாக மல்லுக்கட்டும் சூர்யா இயக்குனர்

Sundar C : இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் எடுத்து வருகிறார்.

அந்த வகையில் அரண்மனை 4 படம் இப்போது உருவாகி இருக்கிறது. இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அரண்மனை 4 படத்துக்கு போட்டியாக வெளியாகும் ரத்னம்

அரண்மனை 4 படத்திற்கு போட்டியாக மற்றொரு கமர்சியல் கிங் இயக்குனரின் படமும் வெளியாகிறது. சூர்யாவுக்கு சிங்கம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் ஹரி.

இவர் கடைசியாக அருண் விஜய்யை வைத்து எடுத்த யானை படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஷாலின் ரத்னம் படத்தை எடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் ரத்னம் படமும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகிறது.

கமர்சியல் ரீதியாக ஹிட் படங்களை கொடுத்து வரும் சுந்தர் சி மற்றும் ஹரி இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News