
Good Bad Ugly: அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் குட் பேட் அக்லி இன்னும் ஒரு சில வாரங்களில் திரைக்கு வருகிறது. அந்த நாளை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகளும் தொடங்கி விட்டது. இயக்குனர் ஃபேன் பாயாக மாறி ஒவ்வொரு காட்சியையும் தெறிக்க விட்டிருக்கிறார்.
இதை டீசரிலேயே நாம் பார்த்தோம். அஜித் மீது இவ்வளவு வெறியா என்று கூட தோன்றியது. அதை அடுத்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் வேற லெவலில் கவனம் பெற்றுள்ளது.
ரியல் OG சம்பவம்
இந்நிலையில் படத்தின் தலைப்பு பற்றிய ஒரு ரகசியம் கசிந்துள்ளது. இதற்கு முன்னதாக அஜித்தின் விடாமுயற்சி தலைப்பை பார்த்ததும் பலரும் கிண்டல் அடித்தனர்.
ஆனால் குட் பேட் அக்லி டைட்டில் வெளியானதுமே அட வித்தியாசமா இருக்கே என பேச வைத்தது. இதை கர்வத்தோடு அஜித் ரசிகர்கள் கூறி வந்தனர்.
மேலும் இது இயக்குனரின் ஜாய்ஸ் என்று தான் இத்தனை நாள் வரை அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் இந்த டைட்டிலை சொன்னது அஜித் தான்.
படத்தின் கதையைக் கேட்டதுமே இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என அவர் சொல்லி இருக்கிறார். அப்புறம் என்ன தலயே சொல்லும்போது ஆதிக் வேண்டாம்னு சொல்லவா போறார்.
உடனே இதே தலைப்பை படத்திற்கு வைத்து போஸ்டரையும் ரிலீஸ் செய்திருக்கின்றனர். தற்போது இந்த முக்கிய சீக்ரெட் வெளியானதை பார்த்த ரசிகர்கள் இதுதான் ரியல் ஓ ஜி சம்பவம் என கொண்டாடுகின்றனர்.