This Week Release Movies: இந்த வாரம் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அன்று கிட்டத்தட்ட பத்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதை பற்றி இங்கு காண்போம்.
இதில் நிஜ சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஃபயர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ், ரட்சிதா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதை அடுத்து கவுண்டமணி நடிப்பில் ஒத்த ஓட்டு முத்தையா, லிஜோமோல் ஜோஸ் வினித் ரோகிணி நடிப்பில் காதல் என்பது பொதுவுடமை ஆகிய படங்களும் வெளியாகிறது.
பிப்ரவரி 14 ரிலீஸாகும் 10 படங்கள்
மேலும் வித்தியாசமான தலைப்பை கொண்ட கண் நீரா, ஸ்ரீகாந்த் நடிப்பில் தினசரி படங்களும் பிப்ரவரி 14 வெளியாகிறது. இதில் தினசரி படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து தேடி தேடி நான் கண்டேன் பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. ஆனால் அதில் ஹீரோயினை பலரும் ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விமல் சூரி நடிப்பில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு படவா பிப்ரவரி 14 ரிலீஸ் ஆகிறது. அதேபோல் 2k லவ் ஸ்டோரி, அது வாங்கினால் இது இலவசம், 9 AM 9 PM, டப்பிங் படமான கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட் ஆகிய படங்கள் காதலர் தின ஸ்பெஷலாக வெளிவர இருக்கிறது.