திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 6 ஹிட் படங்கள்.. அஜித்துக்கு ஒரு பில்லானா, விஜய்க்கு என்ன தெரியுமா?

This week 6 hit films Re-Released: சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஆறு படங்கள் தற்போது வரிசையாக ரீ ரிலீஸ் ஆகுவதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். இப்போது டாப் ஹீரோக்களின் படங்களை ரீ ரிலீஸ் செய்து மறுபடியும் கல்லா கட்டுவது கலாச்சாரம் ஆகிவிட்டது.

ஒரு பக்கம் புது படங்கள் ரிலீஸ் ஆனாலும், எங்க பங்குக்கு நாங்களும் ஏற்கனவே ரிலீசான படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்து முடிந்த அளவுக்கு வசூல் செய்து கொள்கிறோம் என்று டாப் ஹீரோக்களின் படங்களை தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். அதிலும் லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் ஆக இந்த மாதம் பிப்ரவரியில் மட்டும் சிவா மனசுல சக்தி, 96, பிரேமம், சீதா ராமன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன.

இப்படி காதலர்களால் கொண்டாடப்படும் படங்கள் அனைத்தும் இந்த மாதம் வெளியாகி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது போல, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதிரி புதிரி ஹிட் அடித்த டாப் ஹீரோக்களின் 6 படங்கள் அடுத்தடுத்து வெளியாகிறது. அதில் அஜித் மாஸ் காட்டிய ‘பில்லா’ திரைப்படம் மறுபடியும் பிப்ரவரி 23ஆம் தேதி ஆன இன்று ரீ ரிலீஸ் ஆகிறது.

Also Read: பிரம்மாண்டமாக நடக்க உள்ள விஜய்யின் முதல் மாநாடு எங்க தெரியுமா? தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரம்பபுள்ளி

வரிசையாக ரீ ரிலீஸ் ஆகும் 6 ஹிட் படங்கள்

அதை போல் அஜித்தின் ‘காதல் மன்னன்’ திரைப்படமும், பிரபுதேவா- கஜோல் நடித்த ‘மின்சார கனவு’ திரைப்படமும், ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படமும் மார்ச் 1ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. அதைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு அறிமுக படமாக அமைந்த அமீரின் ‘பருத்திவீரன்’ திரைப்படம் 17 ஆண்டுகள் கழித்து வரும் மார்ச் மாதத்தில் மறுபடியும் ரிலீஸ் ஆகிறது.

மேலும் தளபதி விஜய்யின் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘கில்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மறுபடியும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படங்களை எல்லாம் திரும்பவும் தியேட்டரில் பார்க்க போகிறோமே! என்று ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடுகின்றனர்.

Also Read: ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் 60% ஓட்டு விஜய்க்கு தான்.. அடித்து சொல்லும் அரசியல் சாணக்கியன் கணிப்பு

Trending News