சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

3-வது வாரத்தில் வசமாக சிக்கப் போகும் முத்தின மூஞ்சி.. பிக் பாஸ் அல்டிமேட்டின் அடுத்த எலிமினேஷன்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆனது இரண்டு வாரத்தை நிறைவு செய்து, மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்தே காரசாரமான விவாதங்களும் சண்டை சச்சரவும் ஏற்படுவதால் ரசிகர்களுக்கு பிடித்தமான கூடுதல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட உள்ளனர். இன்னிலையில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா உள்ளிட்ட இருவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் மூன்றாவது எலிமினேஷன் இந்த வார இறுதி நாளில் நடைபெறும்.

அதற்கான இந்த வார நாமினேஷன் லிஸ்டில் தாமரைச்செல்வி, பாலாஜி முருகதாஸ், ஜூலி, நிரூப், அனிதா சம்பத், சினேகன், அபினை, சாரிக் உள்ளிட்ட எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் மற்ற போட்டியாளர்களை விட அபினை சுவாரசியம் குறைந்த நபராக ரசிகர்கள் கருதுகின்றனர்.

அத்துடன் இவர் ஏற்கனவே கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியிலும் தற்போது கடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத போட்டியாளராகவே இருக்கிறார்.

போட்டியாளர்களுடன் கலகலப்பாக இல்லாமல், பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருக்கும் டேபிள் சேர் போலவே எனக்கென்ன என்ற எண்ணத்துடன் பிக்பாஸ் அளித்த இரண்டாவது வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே அவரே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் என்று ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர். இருப்பினும் மக்கள் அளித்த ஓட்டிங் லிஸ்டின் அடிப்படையில் யார் மூன்றாவது நபராக பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து வெளியேற போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News