Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. கடந்த வாரம் வீட்டை விட்டு ஜெஃப்ரி அன்சிதா ஆகியோர் வெளியேறினார்கள்.
அதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில் எட்டு போட்டியாளர்கள் இருக்கின்றனர். அது மட்டுமின்றி இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.
அதற்காக ஒவ்வொருவரும் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர். இந்த டிக்கெட்டை வாங்குபவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்று விடுவார்கள்.
அதனால் ஆட்டம் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதன்படி தற்போதைய ஓட்டிங் நிலவரத்தில் தீபக் 35,673 ஓட்டுக்களை பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
ஆட்டத்தை மாற்றுமா TTF.?
அதற்கு அடுத்தடுத்த இடத்தில் ராணவ், ஜாக்லின், பவித்ரா ஆகியோர் உள்ளனர். அதை அடுத்து அருண், விஷால், மஞ்சரி இருக்கின்றனர்.
இவர்கள் மூவருக்குமே பெரிய அளவில் ஓட்டு வித்தியாசம் இல்லை. அதே போல் கடைசி இடத்தில் ரயான் 20334 வாக்குகளை பெற்றுள்ளார்.
அதன்படி இவர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த பைனல் டிக்கெட்டை அவர் பெற்றுவிட்டால் மஞ்சரி கடைசி இடத்தில் இருப்பார்.
மேலும் விஷாலை இந்த வாரம் வெளியேற்ற வேண்டும் என்பது பார்வையாளர்களின் நோக்கம். ஆனால் தற்போது TTF டாஸ்க்கில் அவர்தான் முன்னிலையில் இருக்கிறார்.
அதனால் அவருக்கு இந்த டிக்கெட் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எது எப்படியோ மஞ்சரி அல்லது ரயான் இருவரில் ஒருவர் அல்லது இரண்டு பேருமே வீட்டை விட்டு வெளியேறலாம்.