This Week OTT Release Movies: இந்த வாரம் காதலர் தின ஸ்பெஷலாக தியேட்டரில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்த படங்களும் உள்ளது.
இந்த படங்களில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ள ஃபயர், காதல் என்பது பொதுவுடமை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் ஓடிடியிலும் ஸ்பெஷலான படங்கள் வந்துள்ளது. அதில் ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை தற்போது டிஜிட்டலுக்கு வந்துள்ளது.
காதலர் தின ஸ்பெஷலாக வரும் காதலிக்க நேரமில்லை
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் இப்படம் ஆடியன்ஸை கவருமா என பார்ப்போம். அதை அடுத்து மலையாள படமான மேக்ரோ சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது.
மேலும் ஹிந்தி படமான தூம் தாம் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் மனோராஜ்யம் மனோரமா மேக்ஸ் தளத்திலும் வெளியாகிறது.
அதைத்தொடர்ந்து பியார் டெஸ்டிங் ஹிந்தி சீரிஸ் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. அதேபோல் மதுரை பையனும் சென்னை பொண்ணும் சீரிஸ் ஆகா தமிழ் தளத்தில் வெளியாகிறது.
இது தவிர கொரியன் சைனீஸ் ஆங்கில படங்களும் வரிசை கட்டுகிறது. ஆனால் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்த படங்கள் பெரிதாக எதுவும் இல்லை.