வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்.. தியேட்டரில் வந்த சுவடு தெரியாமல் போன சூது கவ்வும் 2

OTT Release Movies: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் வணங்கான், கேம் சேஞ்சர், மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் வெளியானது. அதை அடுத்து தொடர்ச்சியாக மதகஜராஜா, நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை, தருணம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

இதில் வணங்கானுக்கு நல்ல விமர்சனங்கள் வந்தது. ஆனால் வசூல் அடிப்படையில் மதகஜராஜா தான் இந்த ரேஸில் வெற்றி பெற்றுள்ளது.

காமெடி அலப்பறையாக இருந்த அந்த படத்திற்கு தற்போது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். இப்படியாக பொங்கல் ரிலீஸ் கலைகட்டி இருக்கிறது.

அதேபோல் டிஜிட்டலிலும் இந்த வாரம் 8 படங்கள் வெளிவருகிறது. அதன்படி மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவந்த சூது கவ்வும் 2 தியேட்டரில் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

அதை அடுத்து தற்போது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதேபோல் ஆகா தமிழ், டென்ட் கொட்டா தளங்களிலும் இப்படத்தை காணலாம்.

ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்

அதை அடுத்து தமிழில் டப் செய்யப்பட்டுள்ள மலையாள படமான பனி சோனி லைவ் தளத்தில் நாளை வெளியாகிறது. தொடர்ந்து netflix தளத்தில் ரிபில் கிளப் மலையாள படம் நாளை வெளியாகிறது.

மேலும் ஐ வாண்ட் டு டாக் ஹிந்தி படம் ப்ரைம் தளத்திலும் ஐ எம் காதலன் மலையாள படம் மனோரமா மேக்ஸ் தளத்திலும் நாளை வெளியாகிறது.

அதைத்தொடர்த்து ஒன் அப்பான் அ டைம் இன் மெட்ராஸ் என்ற தமிழ் படம் ஆகா தமிழ் தளத்தில் வெளியாகிறது. அதே தளத்தில் மோக்சபட்டணம் தெலுங்கு படமும், பேமிலி படமும் நாளை வெளியாக உள்ளது.

இப்படியாக எட்டு படங்கள் நாளை ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இதில் எந்தப் படம் ட்ரெண்ட் ஆகிறது என்பதை பார்ப்போம்.

Trending News