இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 4 முக்கிய படங்கள்.. குடும்பஸ்தனை பார்க்க ரெடியா மக்களே

This Week OTT Release: கடந்த வாரம் ஓடிடியை பொறுத்தவரையில் சுழல் 2 வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே முதல் பாகத்திற்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

அதை மிஞ்சும் அளவுக்கு இரண்டாம் பாகம் உள்ளது. இந்நிலையில் இந்த வார ஆரம்பமே விடாமுயற்சியுடன் தொடங்கியுள்ளது. இன்று நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது.

அதைத்தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குடும்பஸ்தன் ஜி5 தளத்தில் மார்ச் 7ம் தேதி வெளியாகிறது. மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த இப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றது.

குடும்பஸ்தனை பார்க்க ரெடியா

அதை அடுத்து டிஜிட்டலுக்கு வரும் இப்படம் நிச்சயம் ஆடியன்சை கவரும். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்து கவனம் பெற்ற ரேகா சித்திரம் சோனி லைவ் தளத்தில் மார்ச் 7 வெளியாகிறது.

இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் தெலுங்கு என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அடுத்ததாக நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த தண்டல் நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் ஏழாம் தேதி வெளியாகிறது.

இப்படமும் தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் டப் செய்யப்பட்ட வெளியாகிறது. இது தவிர ஹாலிவுட் படங்களும் வரிசை கட்டுகிறது.

இருப்பினும் குடும்பஸ்தன் தான் ரசிகர்களின் வீகென்ட் சாய்ஸ். இப்படியாக இந்த வாரம் ஓடிடி களை கட்டுகிறது.

Leave a Comment