இந்த வாரம் பல்வேறு மொழிகளில் உருவான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் OTT தளங்களில் வெளியாக உள்ளன.
அந்த வகையில், அசோக் செல்வன் நடிப்பில் ரொமான்டிக், த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் Sony LIV தளத்திலும், கன்னடத்தில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட ‘கௌரி புத்ரா’ திரைப்படம் ZEE5 தளத்திலும் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு படங்களும் நவம்பர் 16 முதல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன.
மேலும், ரொமான்டிக் காமெடி படமான ‘ஹைக்கூ’ மற்றும் ஹாரர் மிஸ்டரி த்ரில்லர் படமான ‘418’ ஆகிய திரைப்படங்கள் நவம்பர் 20-ம் தேதி Netflix தளத்தில் வெளியாகின்றன. தெலுங்கில் உருவான டார்க் காமெடி படமான ‘அனுமான பஷி’ திரைப்படம் Sun NXT தளத்தில் வெளியாக உள்ளது.
இதுதவிர, இந்தி மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களும் நேரடியாகத் தமிழ் டப்பிங்கில் OTT தளங்களில் வெளியாகின்றன. அந்த வகையில், ‘மேடன்’ திரைப்படம் Amazon Prime Video தளத்திலும், ஜப்பானிய கிரைம் த்ரில்லர் படமான ‘தீப் ப்ளூ ரோடு’ மற்றும் ‘தின்ரோடா 2’ இந்தி வெப் சீரிஸ் ஆகியவை Netflix தளத்திலும் வெளியாகின்றன.
அதேபோல், ‘கேம்பஸ் ஸ்டோரீஸ்’ வெப் சீரிஸ் MX Player மற்றும் Amazon Prime Video தளங்களிலும் வெளியாக உள்ளது. மேலும், தமிழில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ வெப் சீரிஸ் JioHotstar தளத்திலும் வெளியாகிறது.
இப்படி இந்த வாரம் பல்வேறு மொழித் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் தொடர்ச்சியாக OTT தளங்களில் வெளியாக இருப்பதால், ரசிகர்களிடையே இந்த வெளியீடுகள் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




