This Week OTT Release: அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வருகிறது. அதை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் பிளடி பெக்கர், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் தியேட்டருக்கு வருகிறது. இதை ரசிகர்கள் கொண்டாட தயாராகும் நிலையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 10 படங்கள் பற்றி காண்போம்.
அதன்படி இந்த வாரம் தமிழில் மட்டுமே ஐந்து படங்கள் வெளியாகிறது. அனைத்துமே ஒவ்வொரு ரகம்தான். அதில் கார்த்தி அரவிந்த்சாமி நடிப்பில் ஒரு பக்கா கிராமத்து பயணமாக இருந்த மெய்யழகன் நாளை நெட்ஃப்லிஸ் தளத்தில் வெளியாகிறது.
அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ஹிட்லர் நாளை 25ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் வெளியாகிறது. மேலும் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த கோழிப்பண்ணை செல்லதுரை சிம்ப்ளி சவுத் தளத்தில் நாளை வெளியாகிறது.
இந்த வாரம் டிஜிட்டலை கலக்க வரும் படங்கள்
இதைத்தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த கடைசி உலகப் போர் அமேசான் ப்ரைம் மற்றும் டென்ட் கொட்டாவில் வெளியாகிறது. அடுத்து மர்மதேசம் சீரிஸ் இயக்குனர் நாகா இயக்கத்தில் ஐந்தாம் வேதம் தயாராகி இருக்கிறது.
மீண்டும் 90ஸ் கிட்ஸ்களை மிரட்டவரும் இந்த சீரிஸ் ஜீ 5 தளத்தில் நாளை வெளியாகிறது. இப்படியாக தமிழில் இந்த ஐந்து படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் மற்ற மொழிகளிலும் ஐந்து படங்கள் வெளியாகிறது.
அதன்படி பாலிவுட் படங்களான தி மிரண்டா பிரதர்ஸ் ஜியோ சினிமாவிலும் ஸ்விகாடு அமேசான் ப்ரைம் தளத்திலும் வெளியாகிறது. ஹாலிவுட் படங்களை பொருத்தவரை டாடியோ, டோன்ட் மூவ், பேமிலி பேக் ஆகிய படங்கள் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.