Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. 23 நிமிட போனஸ் காட்சிகளுடன் வந்த புஷ்பா 2

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. 23 நிமிட போனஸ் காட்சிகளுடன் வந்த புஷ்பா 2

OTT Release Movies: கடந்த வாரம் தியேட்டரில் பல படங்கள் வெளியானது. அதில் குடும்பஸ்தன் நல்ல வரவேற்பை பெற்று ஃபேமிலி ஆடியன்ஸால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை அடுத்து இந்த வாரமும் சில படங்கள் தியேட்டருக்கு வருகிறது. இதையெல்லாம் தாண்டி […]

OTT Release Movies: கடந்த வாரம் தியேட்டரில் பல படங்கள் வெளியானது. அதில் குடும்பஸ்தன் நல்ல வரவேற்பை பெற்று ஃபேமிலி ஆடியன்ஸால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதை அடுத்து இந்த வாரமும் சில படங்கள் தியேட்டருக்கு வருகிறது. இதையெல்லாம் தாண்டி ஓடிடி தான் இப்போது அதிக கவனத்தை பெற்றுள்ளது.

அதில் இந்த வாரத்தை பொறுத்தவரையில் புஷ்பா 2 அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 1800 கோடி வரை தியேட்டரில் இப்படம் வசூல் லாபம் பார்த்தது.

அதைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸ் பல கோடிகளை கொடுத்து படத்தை வாங்கி இருக்கிறது. இதில் கூடுதல் லாபம் என்னவென்றால் தியேட்டரில் வந்ததைவிட 23 நிமிட காட்சிகள் அதிகமாக சேர்க்கப்பட்டு டிஜிட்டலில் வெளியாகி இருக்கிறது.

ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்

இன்று ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதை அடுத்து டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளிவந்த ஐடெண்டிட்டி ஜீ 5 தளத்தில் நாளை வெளியாகிறது.

மேலும் ஆஹா தமிழ் தளத்தில் பயாஸ்கோப், சன் நெக்ஸ்ட் தளத்தில் எமக்கு தொழில் ரொமான்ஸ் ஆகிய படங்களும் ஜனவரி 31 வெளியாகிறது.

டென்ட் கொட்டா தளத்தில் வாகை படம் வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து திரில்லர் படமான காபி வித் கில்லர் ஆஹா தமிழ் தளத்தில் நாளை வெளியாகிறது.

இந்த வரிசையில் குழந்தைகளுக்கான படமான சில்ட்ரன் ஃப்ரம் ஹெவன் நாளை BCI நீட் தளத்தில் வெளியாகிறது. இது தவிர ஸ்பானிஷ், ஜப்பனீஸ் ஆகிய மொழிகளிலும் படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாகிறது.

இப்படியாக இந்த வாரம் ஏழு படங்கள் டிஜிட்டலுக்கு வருகிறது. இதில் ஐடென்டிட்டி கிரைம் திரில்லர் வகையை சேர்ந்ததால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.