வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. வீக் என்டை என்ஜாய் பண்ண ரெடியா மக்களே

OTT Movies: இந்த வாரம் தியேட்டரில் விடுதலை 2 வெளியாக இருக்கிறது. அதற்கான பிரமோஷனில் விஜய் சேதுபதி, சூரி என எல்லோரும் பிஸியாக இருக்கின்றனர்.

ஏற்கனவே முதல் பாகம் வெற்றியடைந்ததால் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி காண்போம்.

அதில் தமிழை பொருத்தவரையில் இரண்டு படங்கள் வெளியாகிறது. இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் நடித்த நிறங்கள் மூன்று ஆகா தமிழ் தளத்தில் நாளை வெளியாகிறது.

ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்

அடுத்ததாக ராமராஜன் நடிப்பில் பல மாதங்களுக்கு முன்பு சாமானியன் வெளிவந்தது. அப்படம் நாளை டென்ட் கொட்டா தளத்தில் வெளியாகிறது.

அதைத்தொடர்ந்து தெலுங்கு படமான ஜீப்ரா ஆகா தமிழ் தளத்தில் நாளை வெளியாகிறது. அடுத்து ஆறு பேரின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையை பற்றி வெளிவந்த மலையாள படம் தான் முரா.

நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் நாளை வெளியாகிறது. மேலும் தெலுங்கு படமான லீலா வினோதம் Etv win தளத்தில் வெளியாகிறது.

அதைத்தொடர்ந்து மலையாள படமான சப்தகாண்டம் சைனா ப்ளே தளத்திலும் பல்லொட்டி 90ஸ் கிட்ஸ் மனோரமா மேக்ஸ் தளத்திலும் வெளியாகிறது.

மேலும் மலையாள படமான கடகன் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை வெளியாகிறது. இப்படியாக இந்த வார இறுதியை மேற்கண்ட படங்களுடன் ஓடிடி பிரியர்கள் என்ஜாய் செய்யலாம்.

Trending News